Published : 09 Feb 2014 11:06 AM
Last Updated : 09 Feb 2014 11:06 AM
அகில இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் சையத் ஜெ.இன யத்துல்லா, சென்னையில் நிருபர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்போம். பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு மக்களிடம் பெரும் ஆதரவு இருப்பதாக ஊடகங்கள் மட்டுமே தெரிவிக்கின்றன. உண்மையில், பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பு கொண்டிருப்பதால் மோடியின் பக்கம் ஆதரவு அலை வீசுவது போன்ற ஒரு தோற்றத்தைத் தருகிறது.
இந்தியாவின் பிரதமராக ஆவதற்கு முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே இயலும். தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றால், ஜெயலலிதா பிரதமராக முடியும். காங்கிரஸ், திமுக கூட்டணி ஊழல் கூட்டணியாக உள்ளது. எதிரணியில் உள்ள பா.ஜ.க. மதத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது. எனவே, மூன்றாவது அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
காங்கிரஸைவிட பா.ஜ.க. நிர்வாகத் திறமை கொண்ட கட்சி தான். ஆனால் ராம ஜென்ம பூமி உள்ளிட்ட மதவாத செயல் திட்டத்தை எடுத்துக் கொள்கிறது. அவ்வாறு இல்லாமல் இருந்தால் எங்களைப் போன்ற சிறுபான்மை கட்சிகள்கூட பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்போம்.
தேர்தலுக்குப் பிறகு தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் சூழலில் பாஜகவுக்கு அதிமுக அதரவு அளிக்க நேரிட்டால் எங்களது முடிவை பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT