Published : 05 Apr 2017 10:55 AM
Last Updated : 05 Apr 2017 10:55 AM
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வருவாய் இனங்களை குத்தகை எடுத்தவர்கள் இந்த ஆண்டு புதுப்பிக்காமல் அவற்றை கைவிட்டுச் சென்றுள்ளனர். அதனால், இந்த வருவாய் இனங்களை மறு ஏலம் விடுவதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட் டணம், வாடகை மற்றும் குத் தகை உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் நிரந்தர வருவாய் கிடைக்கிறது. இதில் பூங்கா, இரு சக்கர வாகன காப்பகம், பஸ் நிலைய நுழைவு கட்டணம், கட்டண கழிப்பறை உள்ளிட்ட 88 குத்தகை வருவாய் இனங்கள் உள்ளன. இவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விடப்படும். அதிக தொகைக்கு குத்தகை எடுப்பவர்களுக்கு, அந்த வருவாய் இனங்களில் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி அனுமதி வழங்கும். ஒப்பந்ததாரர்கள் இந்த வருவாய் இனங்களுக்கு ஆண்டுதோறும் 5 சதவீதம் கூடுதல் தொகை செலுத்தி அவற்றைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் இந்த ஆண்டு 88 குத்தகை வருவாய் இனங்களில் 68 வருவாய் இனங்களை மட்டுமே ஒப்பந்ததாரர்கள் புதுப்பித்துள் ளனர். மற்ற வருவாய் இனங் கள் மூலம் வருவாய் கட்டுப்படி யாகாததால் அவர்கள் அவற்றை புதுப்பிக்காமல் கைவிட்டுச் சென் றுள்ளனர். ஆனாலும், வருவாய் இனங்களை புதுப்பிக்காமல் அதில் தொடர்ந்து குத்தகைக்கு எடுத்தவர்கள் கட்டணம் வசூலிப்ப தாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வரு வாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அதில் ஒரு பஸ்ஸுக்கு ரூ.100 கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர ஆம்னி பஸ் நிலையத்தில் போதுமான பஸ்கள் இயக்கப்படாததால் அவர்களுக்கு கட்டுப்படியாகாமல் கைவிட்டுள்ளனர். அதுபோல், திருப்பரங்குன்றம் சுற்றுலா வாகன கட்டணம் வசூல் உரிமை ரூ.36 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. அவர்கள் கூடுதல் தொகைக்கு குத்தகை எடுத்ததால் கார் உள்ளிட்ட மற்ற வாகனங்களுக்கும் கட்டணம் வசூல் செய்ய ஆரம்பித்தனர்.
அதை மாநகராட்சி தடுத்ததால் அவர்களும் தங்களுக்கு கட்டுப் படியாகாமல் கைவிட்டுச் சென் றுள்ளனர். அதுபோல், தல்லா குளம், கட்டிச்செட்டி மண்டபம், அமெரிக்கன் மிஷன் சந்து, தெற்கு மண்டபம், சொக்க கொத்தன் தெரு, தெற்கு கோபுரம் உள் ளிட்ட 6 இடங்களில் கட்டண கழிப் பறைகளை கைவிட்டுள்ளனர். இது போல் 20 வருவாய் இனங்களை ஒப்பந்ததாரர்கள் இந்த ஆண்டு ஒப்பந்த காலத்தை புதுப்பிக்காமல் கைவிட்டுச் சென்றனர். இந்த குத் தகை வருவாய் இனங்களை மறு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT