Published : 17 Jun 2017 08:13 AM
Last Updated : 17 Jun 2017 08:13 AM

தட்டுப்பாடு, விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஆன்லைன் மூலம் மணல் விற்பனை திட்டம்: தமிழக அரசு தீவிர பரிசீலனை

தமிழகத்தில் ஆற்று மணல் விற்பனையை முறைப்படுத்தும் வகையில், ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறையை அமல்படுத்த தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

தமிழகத்தில் திருச்சி, கரூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், விழுப் புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் ஆறுகளில் மணல் குவாரி கள் அமைக்கப்பட்டு மணல் அள்ளப்படுகிறது. தனியார் வசம் இருந்த மணல் குவாரிகளை கடந்த மே மாதம் முதல் அரசின் பொதுப்பணித் துறையே ஏற்று நடத்தி வருகிறது.

கடந்த மாதத்தில் 10 நாட் களுக்கு மேல் மணல் குவாரிகள் மூடப்பட்டிருந்ததாலும், குவாரி களை அரசு ஏற்ற பின்னர் விதிமுறை களுக்கு உட்பட்டு மணல் அள்ளப் படுவதாலும் ஒரு மாதத்துக்கும் மேலாக மணல் தட்டுப்பாடு தொடர் கிறது.

இதனால், இரண்டரை யூனிட் மணலின் விலை திருச்சியில் ரூ.15 ஆயிரம், சென்னையில் ரூ.40 ஆயிரம் என விற்கப்படுகிறது. ஏற்கெனவே, இவை முறையே ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மணல் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானப் பணிகள் பெருமளவில் முடங்கியுள்ளன.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட மணல் லாரி உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் கே.ஜெயராம்மூர்த்தி ‘தி இந்து’ விடம் கூறியதாவது: ஒரு லாரி மணலை ஏற்றுவதற்கு சுமார் 20 நாட் கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், ஓட்டுநருக்கு படிச் செலவு, வண்டி வாடகை என செலவு அதிகரிக்கிறது. இந்த செலவையும் சேர்த்துதான், மணலை நாங்கள் விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இதுதான் விலையேற்றத்துக்கான முக்கிய காரணம்.

மாற்று ஏற்பாடு தேவை

மேலும், சரக்கு லாரிகளும் தற்போது மணல் ஏற்ற வரிசையில் காத்திருப்பது சிக்கலை ஏற்படுத்தி யுள்ளது. சரக்கு லாரிகள் வேறு சரக்கு ஏற்றி சம்பாதித்து விடலாம். ஆனால், மணல் லாரிகளில் வேறேதும் ஏற்றி தொழில் செய்ய முடியாது. எனவேதான், குவாரி களை அரசு ஏற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் மணல் தட்டுப்பாடு நீங்கவில்லை, விலையும் குறைய வில்லை. இதற்கு மாற்று முயற்சி களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை வட்டாரங்களில் கேட்டபோது, “மணல் லாரிகளைத் தவிர, மற்ற லாரிகள் வரக் கூடாது என கட்டுப்பாடு விதிக்க முடியாது. மணல் குவாரிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருவதால், 10 நாட்களுக்குள் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும்.

இதற்கிடையே, ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு, அவரவருக்கு குறிப்பிடப்படும் நாளில் குவாரிக்கு வந்து மணலை ஏற்றிச் செல்லும் முறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். இந்த முறை அமல்படுத்தப்பட்டால், தேவையில்லாமல் நாள் கணக்கில் மணல் ஏற்றுவதற்காக லாரிகள் ‘யார்டில்’ காத்திருக்காமல், குறிப் பிட்ட நாளில், குறித்த நேரத்துக்குச் சென்று மணலை ஏற்றிவரலாம். இதனால் மணல் விலையும் குறையும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x