Published : 27 Jun 2017 08:55 AM
Last Updated : 27 Jun 2017 08:55 AM

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட காலாவதியான தின்பண்டங்கள்: குழந்தைகள் உண்பதால் உடல்நலக்கேடு ஏற்படும் அபாயம்

சென்னை பின்னி சாலை அருகே கூவம் ஆற்றில் காலாவதியான, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் கொட்டப்பட்டுள்ளன. அதை குழந்தைகள் உண்பதால் பாதிப் புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட் டுள்ளது.

குழந்தைகள் விரும்பி உண்ணும் பொருளாக பாக் கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் விளங்கி வரு கின்றன. இந்த தின்பண்டங் கள் காலாவதியாகும்போது, அவற்றை முறையாக அழிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவற்றை குழந்தைகள் உண்டு உடல்நலம் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

கடந்த சில தினங்களாக, சென்னையில் பின்னி சாலை மற்றும் மின் வாரிய தலைமை அலுவலகம் பின்புறம் உள்ள இணைப்பு சாலை ஆகியவை இணையும் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில், காலாவதியான பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் கொட்டப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் அதிக அளவில் குடிசை வாழ் மக்களும், குழந்தைகளும் இருப்பதால், அவற்றை உண்ணும் குழந்தைகளுக்கு உடல்நலக் கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

காலாவதியான பொருட்கள் கொட்டப்படுவது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறும் போது, “இதுபோன்ற காலாவதி யான பொருட்களை வியாபாரிகள் யாரும் கொட்டுவதில்லை. அவற்றை கீழே கொட்டுவதால் அவர்களுக்குத்தான் இழப்பு. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனத் திடம் கொடுத்து மாற்றிக் கொள்வார்கள். காலாவதியான பொருட்களை அழிக்கும் பணியை சம்பந்தப்பட்ட நிறு வனங்கள்தான் செய்கின்றன. அந்நிறுவனங்கள்தான் கூவம் ஆற்றில் கொட்டியிருக்க வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “காலாவதியான பொருட்கள் இருந்தால், அவை காலாவதி யானவை என எங்களிடம் சான்று பெற்று, அவற்றை சென்னையில் கொடுங்கையூர் அல்லது பெருங்குடியில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு சென்று குழி தோண்டி புதைக்க வேண்டும். அதற்கு மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் செலுத்த வேண்டும். காலாவதியான பொருட்கள் கூவம் ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டிருப்பதால், அது குறித்து மாநகராட்சிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “கூவம் ஆற்றில் காலாவதியான பொருட்களை கொட்டியது யார் என்பதை கண்டுபிடிப்பது சிரமம். அதனால் அவற்றை குழந்தைகள் உண்பதை தடுக்கு வகையில் உடனடியாக, அங்கு கொட்டப்பட்டுள்ளவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x