Published : 07 Feb 2017 06:02 PM
Last Updated : 07 Feb 2017 06:02 PM
அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கேல ரிகள் அமைக்கும் பணி, வாடிவாசல் தயார் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது. அவனியாபுரத்தை காட்டிலும் தகுதிச் சான்று பெற ஏராளமான மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் திரளு வதால் அனைவரையும் போட்டியில் பங்கேற்பாளராக செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாலமேட்டில் வரும் 9-ம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 10-ம் தேதியும் நடக்கின்றன.
தமிழகம் முழுவதும் இருந்து காளைகள், மாடுபிடி வீரர்கள் அதிகளவு வர வாய்ப்புள்ளதால் குழுகுழுவாக காளைகளை அடக்க மாடுபிடி வீரர்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அலங்காநல்லூர், பாலமேட்டில் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு தகுதிச்சான்று வழங்கும் பணி நேற்று தொடங்கியது. அலங்காநல்லூர், பாலமேட்டில் வாடிவாசலுக்கு வர்ணம் பூசப்பட்டு தயார்படுத்தும் பணிகள் நடக்கின்றன. காளைகள் பார்வையாளர் பகுதியில் புகாமல் இருக்க பாதுகாப்பு தடுப்பு வளையங்கள் அமைக்கும் பணி, கேலரி அமைக்கும் பணி நடைபெறுகிறது.
அலங்காநல்லூர், பாலமேட்டில் கடந்த 2014-ம் ஆண்டு கடைசியாக ஜல்லிக்கட்டு நடந்தது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லி க்கட்டுக்கு காளைகளை அதனை வளர்ப்போர் தயார் செய்வதும், காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தயாராகுவதும் கடைசி நேரத்தில் ஜல்லிக்கட்டு நடக்காமல் போவதுமாக இந்த இரு கிராம மக்களும், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை வளர்ப்பாளர்களும் ஏமாற்றம் அடைவது தொடர்ந்தது.
மாணவர் போராட்டத்தால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. 2014-ம் ஆண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய நபருக்கான ‘மேன் ஆப் தி மேட்ச்’ பரிசாக மதுரை மாநகர ஆயுதப்படையில் காவலர் ந.வினோத்ராஜுக்கு ஹோண்டா மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. 1 தங்கக்காசு, 4 வெள்ளிக்காசுகள், 4 அண்டா, 1 டிராவல் பேக், 1 கட்டில், 1 பீரோ, 11 சாதா பேக், 11 கிப்ட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசுகளை அவர் தட்டிச் சென்றார்.
பல்வேறு தடைகளை தாண்டி ஜல்லிக்கட்டு நடப் பதால், இந்த ஆண்டு மாடுபிடி வீரர்களையும், காளை வளர்ப்போரையும் உற்சாகப்படுத்த பிரம்மாண்ட் பரிசுப்பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அலங்காநல்லூரில் ஜல்லிக் கட்டுக்கு அடையாளமான காளை களை கவுரவப்படுத்த மாடுபிடி வீரர்களால் அடக்க முடியாத காளைக்கு கார் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பவர் டில்லர், 5 புல்லட் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோல் பாலமேட்டிலும் பிரம்மாண்ட பரிசுகளை அறிவிக்க விழா அமைப்பாளர்கள் திட்டமிட்டுள் ளதாக கூறப்படுகிறது. இந்த பரிசுகளை தட்டிச் செல்ல காளைகளை வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் ஆர்வமாக தயாராகி வருவதால் அலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
மாணவர்களுக்கு தனி கேலரி?
அலங்காநல்லூரில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடக்காததால் சென்னை மெரினா முதல் கன்னியாகுமரி வரை மாணவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால்தான் ஜல்லிக்கட்டு சாத்தியமானது. தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் அலங்காநல்லூரில் திரண்டு, அந்த ஊர் மக்களுடன் அமர்ந்து ஜல்லிக்கட்டு மீண்டும் நடக்க போராடினர். இது அலங்காநல்லூர் ஊர் மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், அலங்காநல்லூர் விழா கமிட்டியினர் ஆரம்பத்தில், ஜல்லிக்கட்டை மீண்டும் நடக்க காரணமான மாணவர்களை கவுரவப்படுத்த அவர்களுக்கு தனி கேலரி அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் ஒத்துழைத்தால் மட்டுமே மாணவர்களுக்கு தனி கேலரி அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT