Published : 11 Jun 2016 09:52 AM
Last Updated : 11 Jun 2016 09:52 AM
அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ள 746 மெட்ரிக் பள்ளிகள் மூலம் சுமார் 4 ஆயிரம் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், சில இடங்களில் பள்ளி வாகனங்களை இயக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் (ஆர்டிஓ) அனுமதி மறுக்கின்றனர். இதனால், மாணவர்கள் மாற்று வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்துள்ள புதிய விதி முறைகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீ காரத்தை அரசு ரத்து செய்தது. இதையடுத்து, இந்த பள்ளிகளில் படிக்கும் சுமார் 5 லட்சம் மாணவ - மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அங்கீகாரத்தை நீட்டிக்க வேண்டும் என்று பள்ளிகளின் நிர்வாகிகள் அரசிடம் முறையிட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளிகளின் அங்கீகாரத்தை தற்காலிகமாக அரசு நீட்டித்தது. இந்த கால நீட்டிப்பு மே 31-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத் தில் தொடரப்பட்ட வழக்கை விசா ரித்த நீதிபதிகள் ‘‘பாதிக்கப்பட்ட பள்ளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ஜூன் 30-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் மேலும் கால தாமதம் செய்யாமல், தமிழக அரசு உடனடியாக தகுந்த முடிவை எடுக்க வேண்டும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 19-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது’’ என்று உத்தர விட்டனர்.
இதற்கிடையே, தமிழகம் முழு வதும் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தப்பட்டு எப்.சி (தகுதிச்சான்று) வழங்கப்பட்டு வருகிறது. அங்கீ காரம் நீட்டிக்கப்பட்டுள்ள 746 மெட் ரிக் பள்ளிகள் மூலம் இயக்கப்படும் சுமார் 4 ஆயிரம் வாகனங்களை தொடர்ந்து இயக்குவதில் புது சிக் கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, பள்ளி களுக்கான அங்கீகாரம் மே 31-ம் தேதி வரையில் மட்டுமே இருப்பதாக கூறி, சில இடங்களில் பள்ளி வாக னங்களை இயக்க அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீ காரத்தை நீட்டிப்பு செய்ததற்கான ஆவணங்களை கல்வித்துறையில் இருந்து பெற்று வருமாறு போக்கு வரத்து அதிகாரிகள் பள்ளி நிர்வாகி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் வாகனங்களில் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கின்றனர்.
இது தொடர்பாக மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘‘பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து ஆகும்போது, சம்பந்தப்பட்ட பள்ளி வாகனங்களின் அங்கீகாரமும் ரத்தாகி விடுகிறது. எனவே, தற்போது நீதிமன்றம் உத்தரப்படி பள்ளிகளுக்கான அங்கீகாரம் மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி வாகனங்கள் பற்றி எதுவும் தெரிவிக்காததால், எங்களின் வாகனங்களை இயக்க அனுமதி மறுக்கப்படுகிறது. தற் போது மாற்றாக தனியாக வாகனங் களை கொண்டு வந்து இயக்கு கிறோம்’’ என்றனர்.
பெற்றோர்கள் கூறும்போது, ‘‘பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக் கப்படும்போது, குழந்தைகளின் பயணம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், தனியார் வாகனங்களில் செல்வதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக இருக்கிறது’’ என்றனர்.
பள்ளிகளுக்கான அங்கீகாரம் மே 31-ம் தேதி வரையில் மட்டுமே இருப்பதாக கூறி, சில இடங்களில் பள்ளி வாகனங்களை இயக்க அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT