Published : 30 Dec 2013 10:32 AM
Last Updated : 30 Dec 2013 10:32 AM
தமிழகத்தைச் சேர்ந்த 10 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்க, மத்திய அரசுப் பணியாளர் தேர்வுக் குழுமம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, முதல்வர் தனிப் பிரிவு அதிகாரி எஃப்.இன்னசன்ட் திவ்யா, எஸ்.மலர்விழி, எஸ்.சுரேஷ்குமார், எஸ்.பழனிச்சாமி, எஸ்.பிரபாகரன், எம்.லட்சுமி, ஆர்.கஜலட்சுமி, கே.எஸ்.கந்தசாமி, எஸ்.கணேஷ், சி.கதிரவன் ஆகிய தமிழக அரசு அதிகாரிகள் ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெறவுள்ளனர்.
இதற்கான கோப்புகள் தமிழக அரசுக்கு மத்திய அரசிடமிருந்து வந்துள்ளன.
ஐ.ஏ.எஸ். அந்தஸ்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வுக் குழுமம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT