Published : 30 Mar 2014 12:20 PM
Last Updated : 30 Mar 2014 12:20 PM
ரயில்களில் பயணிகளை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கை களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே போலீஸார் எச்சரித்துள்ளனர்.
எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்களில் திருநங்கைகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. பயணிகளிடம் பணம் கேட்டு சிலர் தொல்லை செய்கின்றனர். காசு தராதவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டுகின்றனர்.
மீஞ்சூரில் புறநகர் ரயிலில் பயணம் செய்த இந்தியன் வங்கி ஊழியர் 5 திருநங்கை களால் அடித்துக் கொல்லப் பட்ட விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக விழுப்புரத்தில் செயல்படும் சகோதரி அறக்கட்ட ளையின் நிறுவனத் தலைவர் கல்கியிடம் கேட்டபோது, ‘‘குடும்பத் தாலும் சமூகத்தாலும் வெறுத்து ஒதுக் கப்படும் திருநங்கைகளால் எப்படி இந்த சமூகத்தை நேசிக்க முடியும்? மத்திய, மாநில அரசுகள் குறுகிய, நீண்டகால திட்டங்களை செயல்படுத்தி, நிரந்தர வருவாய்க்கு வழிசெய்தால்தான் திருநங்கைகளின் நிலை மாறும்’’ என்றார்.
அரவாணிகள் உரிமை சங்கத் தலைவி ஆர்.ஜீவா கூறும்போது, “மும்பையில் திருநங்கைகளை சிவனின் மறுஉருவமாகவே பார்க்கின்றனர். திருநங்கைகள் கையாலேயே புதிய தொழில் தொடங்குகின்றனர். ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங் களில் திருநங்கைகள் முன்னேறு வதற்கு வாய்ப்புத் தரப்படுவ தில்லை. அதனால்தான் பிச்சை எடுக்கவும், பாலியல் தொழிலுக்கும் தள்ளப்படுகின்றனர்’’ என்றார்.
ரயில்களில் திருநங்கைகளின் பணம் பறிக்கும் செயலை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே போலீஸ் ஐ.ஜி. சீமா அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திருத்தணி, கும்மிடிப்பூண்டி, தாம்பரம் புறநகர் ரயில்களிலும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணிகள் பாதுகாப்புக்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ரயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பயணிகளிடம் திருநங்கைகள் அச்சுறுத்தி பணம் பறித்தால் இந்திய தண்டனைச் சட்டம் 384-வது பிரிவின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இதுவரை இந்திய தண்டனைச் சட்டம் 508-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யும்போது, நீதிமன்றம் வெறுமனே 500 ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கிறது. இனிமேல் சட்டப்பிரிவு 384 பயன்படுத்தப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT