Published : 15 Nov 2014 01:06 PM
Last Updated : 15 Nov 2014 01:06 PM
நவ.20, 21 தேதிகளில் பா.ம.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைச் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் வரும் 20.11.2014 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் பொதிகைத் தொலைக்காட்சி நிலையத்திற்கு எதிரில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
அதைத் தொடர்ந்து, அடுத்த நாள் 21.11.2014 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு அதே அரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைச் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இத்தகவலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
"பா.ம.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களுக்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையேற்பார்கள். கட்சித்தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடைபெறும் இந்தச் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களில் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் வரவேற்புரையாற்றுவார்.
20-ஆம் தேதி நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் மத்திய முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர், செயலாளர், பொருளாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், வன்னியர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்வர்.
21-ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டத்தில் மத்திய முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், துணை அணி மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றியத் தலைவர், செயலாளர், பொருளாளர்கள், நகரத் தலைவர், செயலாளர், பொருளாளர்கள், பேரூர் தலைவர், செயலாளர், பொருளாளர்கள், மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், வன்னியர் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழல், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்த இரு கூட்டங்களிலும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT