Published : 22 Mar 2017 09:48 AM
Last Updated : 22 Mar 2017 09:48 AM

பண்டைய நாகரிகத்தை பார்த்து அறியும் வகையில் அகழாய்வு நடந்த இடங்களில் அருங்காட்சியகம் தேவை: மரபியல் மேலாண்மை முறைமையை உருவாக்கவும் வல்லுநர்கள் கோரிக்கை

பண்டைய நாகரிகத்தை அனை வரும் பார்த்து ஆராய்ந்து அறியும் விதமாக அகழாய்வு மேற்கொள்ளப் பட்ட பகுதிகளுக்கு அருகே அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும். அதற்கு மரபியல் மேலாண்மை முறைமையை உருவாக்க வேண் டும் என வல்லுநர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

மானாமதுரை அருகே கீழடியில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப் பட்ட அகழாய்வில் பண்டைய நாக ரிகத்தின் சுவடுகள் கண்டுபிடிக்கப் பட்டன. அகழ்வு குறித்த ஆய்வ றிக்கை தயாராவதால் அங்கே அகழ் வாராய்ச்சி பணிகள் நிறுத்தப்பட் டுள்ளதாக மத்திய பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

மரபியல் மேலாண்மை

கீழடியில் மீண்டும் முழுமை யாக அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடரும் நிலை யில், ‘தமிழகத்தில் ஏற்கெனவே அகழ்வு செய்யப்பட்ட சிறப்புமிக்க இடங்களின் வரலாற்றை மக்களுக் கும், இளைஞர்களுக்கும் தெளிவாக எடுத்துரைக்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகங் களை அமைக்க வேண்டும். இதற்கு, தொல்லியல் மற்றும் அருங் காட்சியகத் துறைகள், அறநிலையத் துறை, சுற்றுலாத் துறை, உயர் கல்வித் துறை ஆகியன இணைந்து செயல்படும் வகையிலான மரபியல் மேலாண்மை முறை மற்றும் கொள்கைச் செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும்’ என்கிறார் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் உதவிப் பேராசிரியர் வீ.செல்வகுமார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர், “நாம் படித்த காலத்தில் வரலாறு என்பது எழுத்தாக மட் டுமே இருந்தது. ஆனால், இப் போது எதையும் காணொலி, மின்ன ணுக் காட்சியாகப் பார்த்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. இப்படியான சூழலில் நமது பண் டைய நாகரிகம் குறித்த தரவுகளை நவீன தொழில்நுட்பத்துடன் காட்சி யப்படுத்தி வருங்கால சந்ததிக்கான வளமாக பாதுகாத்துக் கொடுக்க வேண்டும்.

அகழ்வது மட்டும் முக்கியமல்ல. அதன்மூலம் அறியப்படும் தரவு களைப் பாதுகாத்து அவற்றை அனைத்துத் தரப்பிடமும் கொண்டு சேர்க்க வேண்டியதும் முக்கியம் ஆகும். இந்த விவகாரத்தில் இங்கி லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட அயல் நாடுகள் செயல்பட்ட அளவுக்கு நாம் செயல்படவில்லை. நமது பண்பாட்டுப் பெருமை சொல்லும் தரவுகளை வெளிநாடுகளில் அருங் காட்சியகங்களில் அழகாகக் காட்சிப் படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அதற்காக, அகழ்வு செய்யும் இடங்களில் எல்லாம் அருங்காட்சி யகங்களைக் கட்டவேண்டும் என்ப தில்லை. தேவையான, நன்கு பராமரிக்கக்கூடிய, சுற்றுலாப் பயணிகள் வரக்கூடிய சில இடங் களில் கட்டிடமாக கட்டலாம். மற்ற இடங்களில் திறந்தவெளி இடக் காட்சியகங்கள் அமைத்து பாதுகாக்கலாம். குஜராத்தில் உள்ள லோத்தல், தோலாவீரா தொல்லியல் காட்சியகங்கள் இத் தகையவைதான்.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், காவிரிப்பூம்பட்டினம், கங்கை கொண்ட சோழபுரம், அழகன்குளம், கீழடி, புதுச்சேரி அருகே அரிக்க மேடு உள்ளிட்ட இடங்களில் அக ழாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தோலாவீராவில் விமான தளம் அமைக்குமளவுக்கு திட்டமிடு கிறது குஜராத் அரசு. அதுபோல நாமும் அகழாய்வு செய்யப்பட்ட இடங்களுக்கான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு களை உருவாக்குவது குறித்து திட்டமிட வேண்டும்.

வீ.செல்வகுமார்

தமிழகத்தில் இன்னும் ஆயிரத் துக்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்ய முடியும். அதற்கு முன்னதாக ஏற்கெனவே, அகழ்வு செய்யப்பட்ட இடங்களில் சிறப்பான சிலவற்றில் அருங்காட்சியகங்களை அமைத்து அவற்றை நோக்கி உள்நாட்டு, வெளிநாட்டு மக்களை ஈர்க்கும் வண்ணம் சுற்றுலா திட்டங்களை வகுக்க வேண்டும்.

இதற்கு தேவையான நிதியை ‘யுனெஸ்கோ’ உள்ளிட்ட நிறுவனங் களிடம் இருந்தும் பெறமுடியும். இப்படி அமையும் அருங்காட்சி யகங்களை ஆராய்ச்சிக்கு பயன் படுத்தும் வகையில் கல்லூரிகளின் வரலாற்றுப் பாடத்தில் தொல்லி யலையும் சேர்க்க வேண்டும். இதன் மூலம் நமது மரபையே நமக்கான வளமாக உருவாக்கிக் கொள்ள முடியும்.

இவற்றையெல்லாம் திறம்பட செய்து முடிக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து மரபியல் மேலாண்மை முறைமையை உருவாக்க வேண் டும்” என்று கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x