Published : 10 Apr 2017 10:07 AM
Last Updated : 10 Apr 2017 10:07 AM
செல்போனில் விளையாடும் வகை யில் ஜல்லிக்கட்டு வீடியோ கேம் அப்ளிகேஷன்கள் அதிக அளவில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
தமிழர்களின் வீர விளையாட் டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் மாணவர் கள், இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து தன்னெழுச்சியாக மாநிலம் முழுவதும் போராட்டங் களை நடத்தினர்.
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த னர். இதன் விளைவாக மத்திய, மாநில அரசுகள் சட்டத் திருத்தம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தன. இதையடுத்து இந்த விளையாட்டை சர்வதேச அளவுக்கு கொண்டுசெல்வதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக் கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மைதானத்தில் நேரடியாக களமிறங்கி ஜல்லிக்கட்டு விளையாடுவது மட்டுமின்றி, கணினி மற்றும் செல்போன் மூலமாகவும் ஜல்லிக்கட்டு விளையாடும் வகை யிலான புதிய வீடியோ கேம் மொபைல் அப்ளிகேஷன்கள் தற்போது அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின் றன.
பிரபலமான டெம்பிள் ரன், சப்வே சர்ஃபர்ஸ் போன்ற அப்ளி கேஷன்களில் உள்ளதுபோலவே, காளையை வீரர்கள் விரட்டிப் பிடிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு ரன், ஜல்லிக்கட்டு ரன் 3டி, ஜல்லிக் கட்டு போன்ற பெயர்களில் மொபைல் அப்ளிகேஷன்கள் வடி வமைக்கப்பட்டுள்ளன.
‘காளையை அடக்கினால்’ கார்
இவற்றில் சிலவற்றில் ஜல்லிக் கட்டு கள நிலவரத்தை வெளிப் படுத்தும் வகையில் “மாடு பிடிமாடு, இந்த காளையை அடக்கினால் கார் பரிசு” என்பன உள்ளிட்ட வாச கங்களைக் கூறி தமிழ் மொழியில் வர்ணனையும் செய்யப்படுகிறது. இதற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள், சிறுவர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.
10 காளைகள்
இதுகுறித்து திருச்சி சாத்தனூ ரைச் சேர்ந்த இளைஞர் கருப்பையா கூறும்போது, “ஜல்லிக்கட்டு வீடியோ கேம் தொடர்பாக கூகுள் பிளே ஸ்டோரில் புதிது, புதிதாக அப்ளிகே ஷன்கள் வரத் தொடங்கியுள்ளன. ஜல்லிக்கட்டு ரன் என்ற அப்ளி கேஷனை இதுவரை சுமார் 5 லட் சம் பேர் பதிவிறக்கம் செய்துள் ளனர். அதில் அப்பு, கருப்பன், கொம்பன், பாண்டி, மருது, முத்து, வெள்ளையன், வெங்கலப்பாண்டி, வெள்ளிமணி, தங்கமணி என 10 காளைகள் உள்ளன. பெறக்கூடிய புள்ளிகளின் அடிப்படையில் நமது விருப்பப்படி ஏதேனும் ஒரு காளை யைத் தேர்வு செய்து விளை யாடலாம்.
எனினும், ஆட்டத்தின் இடை யிடையே அடிக்கடி விளம் பரங்கள் வருவதால் விளையாடு வதில் ஆர்வம் குறைகிறது. அதைத் தவிர்க்கும் வகையில், விளம்பர மில்லாத புதிய அப்ளிகேஷன்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும்” என்றார்.
ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க இணைச் செயலாளர் சூரியூர் ராஜா கூறும்போது, “நம்முடைய பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான ஆர்வமும், விழிப்புணர்வும் தற்போது உலக அளவில் அதிகரித்து வருகிறது. அதை வெளிக்காட்டும் ஓர் அறி குறியே இதுபோன்ற புதிய வீடியோ அப்ளிகேஷன்களின் வரவு எனலாம். இவற்றை தயாரித்தவர்களில் பெரும்பாலானோர் பிற மாநிலத் தைச் சேர்ந்தவர்களாக உள்ள னர். அவர்களை மனதார பாராட்டு கிறோம்.
எனினும் கூடுதலாக சில வசதிகளை ஏற்படுத்தி, ஜல்லிக் கட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலான புதிய அப்ளிகேஷன்களை, தமிழ்நாட்டில் உள்ள மென்பொருள் வல்லுநர்கள் தயாரித்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். தமிழரின் பண்பாடு, கலாச்சாரத்தை உலக அளவில் எளிதில் கொண்டுசெல்ல இதுவும் ஒரு சிறந்த வழியாக விளங்கும்” என்றார்.
கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ஜல்லிக்கட்டு குறித்த ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன் ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க மறுத்ததுடன், “வீடியோ கேமில் ஜல்லிக்கட்டு விளையாடலாமே” என கருத்து தெரிவித்ததும், அதற்கு தமிழகத் தில் எதிர்ப்பு கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT