Last Updated : 21 Jun, 2016 09:11 AM

 

Published : 21 Jun 2016 09:11 AM
Last Updated : 21 Jun 2016 09:11 AM

அப்டேட் செய்யப்படாத தமிழக அரசின் இணையதளம்: எம்எல்ஏக்கள் பட்டியலில் இறந்தவர் பெயர்- அமைச்சர் படமில்லை; அரசாணை பதிவேற்றமில்லை

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மேம்படுத்தப் படாமல் (‘அப்டேட்’) உள்ளது. சில அமைச்சர்களின் படங்கள் இல்லா ததுடன், எம்எல்ஏக்கள் பட்டியலில் இறந்தவர் பெயர் உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் அரசு, தனியார் துறைகளின் செயல் பாடுகள் பெரும்பாலும் கணினிமய மாகி வருகின்றன. தகவல்களை உடனுக்குடன் வழங்குவது மட்டு மின்றி, வெளிப்படையான நிர்வாகத் துக்கும் வழிவகுப்பதால் இணைய தள சேவைக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. இதனால், அனைத்துத் துறைகளிலும் மின் ஆளுமைத் திட்டங்களைச் செயல் படுத்த தமிழக அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.tn.gov.in செயல்படுத்தப்பட்டு வருகி றது. இதில், தமிழக ஆளுநர், முதல் வர், அமைச்சர்கள், எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களின் பெயர், விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, அரசுத் துறைகள் சார்ந்த இ-சேவைகள், அனைத்து சான்றிதழ்களுக்குமான படிவங்கள், அறிவிப்புகள், அரசாணைகள், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி களின் செய்தி மற்றும் புகைப்படங் கள் அதில் பதிவேற்றம் செய்யப்படு கின்றன.

இந்நிலையில், சமீபகாலமாக இந்த இணைய பக்கத்தில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று ஒரு மாதமான நிலை யில், அரசின் இணையதள ஆங்கில வடிவப் பக்கத்தில் அமைச்சர்கள் கே.சி.கருப்பண்ணன் (சுற்றுச் சூழல்), ஓ.எஸ்.மணியன் (கைத்தறி), வெல்லமண்டி நடராஜன் (சுற்றுலா) ஆகியோரது படங்கள் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை.

அதேபோல, அமைச்சரவை பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள திண்டுக்கல் சீனிவாசனின் (வனத் துறை) புகைப்படம்கூட தமிழ் வடிவப் பக்கத்தில் இடம் பெறவில்லை.

மேலும், மதுரை மாவட்டம் திருப் பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட எஸ்.எம்.சீனி வேல் (அதிமுக) பதவி ஏற்பதற்கு முன்பே உடல்நலக்குறைவால் இறந் தார். இதனால் அந்த தொகுதிக்கான எம்எல்ஏ பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் இணையதளத்தில் உள்ள எம்எல்ஏ-க்கள் பட்டியலில் சீனி வேலின் பெயரும் தற்போதுவரை இடம்பெற்றுள்ளது.

அரசு இணைய ஆங்கில வடிவப் பக்கத் தில், தமிழ் வளர்ச்சித் துறையின் இணைப்பில் 2006, கைத்தறித் துறை இணைப்பில் 2013, போக்குவரத்து, சட்டம், நெடுஞ்சாலைத் துறைகளின் இணைப்பில் 2014-ம் ஆண்டு வரை மட்டுமே அரசாணைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, தமிழ் வடிவப் பக்கத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை இணைப்பில் 2011, தமிழ் வளர்ச்சி, உயர்கல்வித் துறை இணைப்பில் 2012-ம் ஆண்டு வரை மட்டுமே பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. அதற்குப் பிறகு புதுப் பிக்கப்படவில்லை. எனினும், வேளாண்மை, நிதி, சுகாதாரம், தொழிலாளர் நலன், சமூக நலம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உள்ளிட்டவற்றின் இணைப்பில், 2016-ல் வெளியிடப்பட்ட பல்வேறு அரசாணைகள் தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 வடிவங்களிலும் இடம்பெற் றுள்ளன.

பிற மாநிலங்கள், வெளிநாடு களில் வசிப்போர், அரசின் நிர்வாகம் குறித்து தெரிந்துகொள்ள, இணைய தளம் மூலமாகவே தகவல்களை தேடுவர். குறிப்பாக, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத் தையே, நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களாக கருதுவர். இந்நிலை யில், அந்த தகவல்கள் ‘அப்டேட்’ செய்யப்படாமலும், தவறுடனும் இருந்தால், அரசின் இணையதளம் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை குறைந்துவிடும்.

எனவே, அரசின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் உள்ள தகவல் களைப் புதுப்பிக்கவும், அரசாணை களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென் பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x