Published : 27 Mar 2014 10:07 AM
Last Updated : 27 Mar 2014 10:07 AM
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி வேட்பா ளர் சுப.உதயகுமார், முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க, கூடங் குளம் காவல் ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார். இவர் கன்னியாகுமரி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளராகக் களம் இறங்குகிறார்.
தமிழக அரசின் தடை உத்தரவை மீறியதாக 2012-ல் இவர் மீது கூடங்குளம் போலீஸார் இரு வழக்குகளை பதிவு செய்தனர்.
அந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, உதயகுமார் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் உதய்குமாருக்கு எதிராக வள்ளியூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்த நிலையில் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள வழக்குகளில் முன் ஜாமீன் கேட்டு உதயகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
மனுவில், 2 வழக்குகளிலும் போலீஸார் தன்னைக் கைது செய்ய வாய்ப்புள்ளது எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவுக்கு கூடங்குளம் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 1-க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT