Published : 02 Feb 2014 12:00 PM
Last Updated : 02 Feb 2014 12:00 PM
தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட அங்கு சிட்டிங் எம்.பி.யான முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலுவும் மனு அளித்துள்ளனர். இதில் பாலுவுக்கு ஆதரவாக 40 பேர் மனு அளித்துள்ளனர்.
டி.ஆர்.பாலுவுக்கு 40 பேர் மனு கொடுத்திருக் கிறார்கள் என்றதும் பழனிமாணிக்கம் தரப்பிலிருந்தும் ஒரு கோஷ்டி கிளம்பியதாம். ஆனால், ’அந்த ஆர்ப்பாட்டமெல்லாம் வேண்டாம். நான் பணம் கட்டிவிட்டேன். இனி தலைமை பார்த்துக்கொள்ளும். சீட் கிடைத்தால் போட்டியிடுவோம்’ என்று சொல்லி அவர்களை அடக்கிவிட்டாராம் பழனி மாணிக்கம்
வாண்டையார்களிடம் ஆசி
பொங்கலன்று தஞ்சாவூரில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசிஅய்யா வாண்டையார் ஆகியோரைச் சந்தித்து ஆசிபெற்ற டி.ஆர்.பாலு, ’தஞ்சை தொகுதியில் போட்டியிட கட்சியில் பணம் கட்டுகிறேன்.
சீட் கிடைத்தால் என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று ஆதரவு கேட்டதாகவும் சொல்கிறார்கள்.
வழக்கமாக எல்லோரிடத்திலும் அதிகாரத் தோரணை காட்டும் டி.ஆர்.பாலுவிடம் இப்போது ஒரு கணிவு தெரிகிறது. ஆனாலும், அவருக்கு பின்னால் செல்ல கட்சி நிர்வாகிகளுக்கு இன்னமும் ஒருவித தயக்கம் இருக்கிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, இதுவரை அதிருப்தியில் இருந்தவர் களையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இருக்கிறார் பழனிமாணிக்கம்.
தலைவர் கைவிடமாட்டார்
தற்போதைய நிலவரம் குறித்து பழனிமாணிக்கத்தின் தம்பி எஸ்.எஸ். ராஜ்குமார் ‘தி இந்து’விடம் பேசு கையில் "எப்போதும் அண்ணனுக்கு மட்டும்தான் மனு அளிப்பது வழக்கம். அண்ணன் தஞ்சை தொகு தியில் 8 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ளார். வாய்ப்புக் கிடைத் தால் இந்த முறை யும் வெற்றி பெறுவார்.
நாங்கள் தொகுதிக்காக செய்திருப்பதை தொகுதி மக்கள் அறிவர். சின்னச் சின்ன சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். எல்லோ ரையும் திருப்தி செய்துவிட முடியாது.
சீட் கிடைத்தால் மக்கள் பணி; இல்லாவிட்டால் வழக்கம் போல் கட்சிப்பணி. தலைவர் நிச்சயம் எங்களை கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்று சொன்னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT