Published : 31 Jan 2014 09:19 AM
Last Updated : 31 Jan 2014 09:19 AM
தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமையன்று கவர்னரின் உரை முடிந்ததும், பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடியது. அந்த கூட்டத்தில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை வரும் 3-ம் தேதி வரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
அது குறித்து பேரவைத் தலைவர் தனபால் நிருபர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் மறைந்த முன்னாள் பேரவை உறுப்பினர்கள் 5 பேருக்கு (சௌ.வே.வரதராஜன், ந.பழனிவேல், எஸ்.ரெத்தினராஜ், ஆ.கருப்பையா, சி.துரைராஜ்) 31-ம் தேதி (வெள்ளி) இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. மறுநாள் விவாதம் தொடர்கிறது. ஞாயிறு விடுமுறை.
பிப்ரவரி 3-ம் தேதி, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்வர் ஜெயலலிதாவின் பதிலுரையும் இடம்பெறும். அன்றைய தினம், சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT