Published : 19 May 2017 08:15 AM
Last Updated : 19 May 2017 08:15 AM
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 56 கிராம மக்கள் குலதெய்வத்தை வழிபடுவதற்காக கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம் பரியம் மாறாமல் மாட்டு வண்டி களில் செல்கின்றனர். இந்த ஆண்டு குலதெய்வ வழிபாட்டுக்கு 360 மாட்டு வண்டிகளில் 16 நாள் பயணத்தைத் தொடங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அகத்தாரிருப்பு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங் களில் வசிக்கின்றனர். இவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தங்களது குலதெய்வங்களை வழி பட 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடும்பத்துடன் கடந்த 200 ஆண்டு களுக்கும் மேலாக மாட்டு வண்டி களில் செல்லும் வழக்கம் உள்ளது.
வறட்சி காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை செல் வதை மாற்றி, தற்போது 4 ஆண்டு களுக்கு ஒருமுறை சென்று வருகின் றனர். இந்த ஆண்டு குலதெய் வத்தை வழிபடுவதற்காக 56 கிராமங் களில் இருந்து 360 மாட்டு வண்டி களில் பூர்வீகமான அகத்தாரிருப் புக்கு நேற்று முன்தினம் மாலை வந்தனர்.
இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு கூடி ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் மாட்டு வண்டிகளில் கோயிலுக்குச் செல் வோர் முன்னால் செல்லும் மாட்டு வண்டிகளை முந்திச் செல்லக் கூடாது எனவும், செல்லும் வழித் தடங்கள், ஊர்கள், தங்கும் இடம், விதிமுறைகள், கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் குறித்தும் நிர்வாகி களால் விளக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து நேற்று அதி காலை 5 மணிக்கு மாட்டு வண்டி களில் புறப்பட்டனர். பசும்பொன், கோட்டைமேடு, கமுதி, வழியாக விருதுநகர் மாவட்டம் ரெட்டியபட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக, சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கூடமுடையார் கோயில், ராஜபாளையம் அருகே உள்ள ராஜகுலராமன் பொன்னு இருளப்பசாமி கோயில், திருவில் லிப்புத்தூர், அருகே தைலாபுரம் காளியம்மாள் கோயில் உள்ளிட்ட தங்களது குலதெய்வங்களை வழி பாடு செய்ய பயணம் தொடங்கினர்.
முதல் நாள் இரவு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையி லும், இரண்டாவது நாள் விருதுநக ரில் தங்கிய பிறகு சிவகாசியில் ஒன்று கூடும் இவர்கள், எம்.புதுப்பட்டி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தங்க ளது குலதெய்வங்களை வழிபடு வதற்காக தனித்தனியாக பிரிந்து செல்கின்றனர். 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒன்றுகூடும் அவர் கள், தங்களது பெரிய கோயிலான கூடமுடையார் கோயிலில் தங்கி அங்கு நடைபெறும் நள்ளிரவு பூஜை யில் வழிபடுகின்றனர்.
அன்று காலை நேர்த்திக்கடனாக ஆடு பலியிட்டு, அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலை வுக்கு அப்பால் கொண்டுசென்று, கறியை சமைத்து உணவு தயா ரித்து சாப்பிடுவர். பின்னர் அங்கி ருந்து சிவகாசி, விருதுநகர், அருப் புக்கோட்டை, திருச்சுழி வழியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டல மாணிக்கம், கமுதி, கோட்டைமேடு, பசும்பொன் வழியாக அகத்தாரி ருப்பு கிராமத்துக்கு 16 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்து சேருவர். பின்னர் அங்கிருந்து தங்களது கிராமங்களுக்கு தனித்தனியாகப் பிரிந்து செல்வர்.
இதுகுறித்து அகத்தாரிருப்பைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரி யர் கோவிந்தராஜன் கூறியதா வது: அகரித்தாரிருப்பை பூர்வீக மாகக்கொண்ட எங்கள் உறவினர் கள் அனைவரும் கார், பங்களா என எவ்வளவு வசதியாக இருந்தாலும், குலதெய்வ வழிபாட்டுக்காக அனை வரும் ஒன்றுகூடி மாட்டு வண்டி யில் செல்லும் வழக்கம் 200 ஆண்டு களுக்கும் மேலாக உள்ளது. இதற் காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் பணியாற்றினாலும் வந்துவிடுவர்.
தற்போது வரை மாட்டு வண்டி களில் மட்டுமே பயணம் செல்லும் முறையை முன்னோர்களின் வழி யில் தங்களது குழந்தைகளும் தெரிந்துகொள்ளும் வகையில் சென்று வருகிறோம். இதனால் உறவினர்கள், உறவு முறைகள் குறித்து அறிந்துகொள்ளவும், அவர்களுடன் நல்லுறவை பேணவும் முடிகிறது.
தற்போது மாட்டு வண்டிகள் குறைந்துவிட்டதால் சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து வாடகைக்கு அழைத்து வருகிறோம். இதற்காக ஒரு மாட்டு வண்டிக்கு வாடகையாக ரூ.20 ஆயிரம் செலுத்துகிறோம். இந்த அனுபவம் அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT