Published : 09 Feb 2014 11:33 AM
Last Updated : 09 Feb 2014 11:33 AM
காஞ்சிபுரத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கிளை மற்றும் பட்டு கூட்டுறவு சங்கங்களில், கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் சகாயம், சனிக்கிழமை திடீர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோ-ஆப்டெக்ஸில் திருமணப் புடவை விற்பனையில்தான் அதிக வருவாய் ஈட்டப்படுகிறது. தற்போது மொத்த விற்பனையில் 20 சதவீதத்தை திருமணப் புடவைகள் பிடித்துள்ளன.
திருமணப் புடவைகள் விற்பனையை அதிகரிப்பதற்காக கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள், மாநிலம் முழுவதும் திருமண மண்டபங்களுக்குச் சென்று, அந்த மண்டபத்தை பதிவு செய்தி ருக்கும் திருமண வீட்டாரின் விவரங்களைப் பெற்று, அவர் களின் வீடுகளுக்கே செல்ல உள்ளனர். அங்கு கோ-ஆப்டெக் ஸில் விற்பனை செய்யப்படும் திருமண புடவை ரகங்கள், அதற்கு நிறுவனம் வழங்கும் தள்ளுபடிகள் ஆகியவற்றை விளக்கி, ஆர்டர் எடுக்க உள்ளனர்.
இவ்வாறு செய்வதன் மூலம் தற்போது உள்ள 20 சதவீத விற்பனையை 3 மடங்காக உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். இதன் மூலம் நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பை வழங்க முடியும். மாநிலத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 15 ஷோ ரூம்களை ரூ.4 கோடி செலவில் புதுப்பொலிவு பெறச் செய்வதற்கான நடவடிக்கை களும் நடைபெற்று வருகின்றன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT