Published : 02 Dec 2013 12:15 PM
Last Updated : 02 Dec 2013 12:15 PM
அண்மைக்காலமாக அதிமுக அமைச்சர்கள் மீது நில அபகரிப்புப் புகார்கள் எழுந்து வருகின்றன, ஆனால் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன், என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்காடு இடைத் தேர்தலை ஒட்டி, திமுக வேட்பாளர் மாறனை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். நேற்று, செம்மாநத்தம் மலைக்கிராமத்தில் பேசிய அவர்: திமுக-வினர் மீது நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்ட போது அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். தற்போது அதிமுக அமைச்சர்கள் மீது நில அபகரிப்புப் புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதற்கு காரணம் என்ன என்றார்.
ஏற்காட்டில் முக்கியப் பயிரான காபிக்கு நிழலும், போதிய வெயிலும் தேவை. எனவே கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மரங்கள் வெட்ட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஏற்காட்டில் மரங்களை வெட்டக்கூடாது என்று தடை விதித்துள்ளது.இதனால், சுமார் 10 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT