Published : 30 Jun 2016 08:11 AM
Last Updated : 30 Jun 2016 08:11 AM
ஏலச்சீட்டு, பண இரட்டிப்பு, இரிடியம் சொம்பு, மண்ணுளிப் பாம்பு போன்ற மோசடி வகையறாக்கள் எல்லாம் பழைய பாணி. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப மோசடி பேர் வழிகளும் தங்களை தகவமைத்துக் கொண்டார்கள். இதோ கணினி யுகத்தில் நடக்கும் சில மோசடிகள் உங்கள் பார்வைக்கு. இவை நாளை உங்களை நோக்கியும் ஏவப் படலாம். உஷார் மக்களே.. உஷார்..
* பிரபல நிறுவனத்தின் குளிர் சாதனப் பெட்டி வாங்குகிறீர்கள். அடுத்த சில நாட்களில் அந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு பிரிவிலிருந்து வருவதுபோல குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வரும். அதில் நீங்கள் வாங்கிய பொருளுக்கு ரூ.10 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக குறிப்பிட்டு உங்கள் வங்கிக் கணக்கு எண், வங்கி அட்டையின் சி.வி.வி. எண் உள்ளிட்ட விவரங்களை கேட்பார் கள். அடுத்தடுத்த மின்னஞ்சல் தொடர்புகளில் அவர்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தி, வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு வரை வாங்கிவிடுவார்கள். பிறகென்ன மொத்தமாக உங்கள் பணம் மாயம்.
* சமீபத்தில் தொடர்பு கொண்ட குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து வரும் மின்னஞ்சலில் ‘உங்களுக்கு ரூ.15,000 மதிப்புள்ள பரிசு விழுந்திருக்கிறது. நாளை எங்கள் பணியாளர் உங்கள் வீட்டில் அதனை டெலிவரி செய்வார்’ என்று தகவல் வரும். அதேபோல மறுநாள் அழகாக பேக்கிங் செய் யப்பட்ட பெட்டியோடு வரும் டெலிவரி நபர், பேக்கிங் சார்ஜ் மற்றும் தபால் சேவை கட்டணம் என்று ரூ.500 வசூலிப்பார். இன்னும் சிலர் உங்கள் வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்டு போன்றவற்றை கேட்பார்கள். கொடுத்தால் அவர்கள் கொடுத்த காலிப் பெட்டியைப் போலவே மொத்தப் பணமும் காலி.
* கொங்கு மண்டல பகுதிகளில் பெரிய மாடி வீடாக குறிவைப்பார் கள். பிரபல அலைபேசி நிறுவனத்தி லிருந்து பேசுவதுபோல அந்த வீட்டின் உரிமையாளரிடம் வீட்டு மாடியில் அலைபேசி டவர் வைக்க விரும்புவதாகவும் மாத வாடகை யாக பெரும்தொகை தருவதாகவும் பத்திரத்தில் எழுதி ஒப்பந்தம் போடு வார்கள். பத்திரப் பதிவு அலுவலகம் வரை உங்களை அழைத்துச் செல்வார்கள். கடைசி நேரத்தில் எங்கள் மேலதிகாரி பத்திரத்தில் கையெழுத்துப்போட ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்கிறார். கொடுத்துத் தொலையுங்கள். நாளையே உங்கள் வங்கிக்கணக்கில் ஐந்து லட்சம் வாடகை வரப்போகிறதுதானே என் பார்கள். கொடுத்தால் முடிந்தது, நொடியில் ‘எஸ்கேப்’.
* தென் மாவட்டங்களில் காற் றாலை அமைப்பதில் பங்குதாரராக சேருங்கள்; லாபத்தில் பங்கு கிடைக் கும் என்று அழைப்பு வரும். ரூ.1000 தொடங்கி 10,000 வரை இவர்களின் இலக்கு. பணம் சேர்ந்ததும் காற்று போல கண்ணுக்கு தெரிய மாட்டார்கள்.
* ஷாப்பிங் செய்வதற்காக பெரிய மால்களின் படியேறினால் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு கூப்பன்களை கையில் திணிப்பார்கள். அடுத்த நாளே குடும்பத்துடன் இலவச உல்லாச சுற்றுலாவுக்கோ அல்லது சொகுசு தங்கும் விடுதிக்கோ அழைப்பார் கள். குடும்பத்துடன் அங்கு சென்ற வுடன் உணவுக்கு, தங்கும் அறைக்கு, பராமரிப்புக்கு என கணிச மான தொகையை கறந்து விடுவார்கள்.
* ரயில்களில் பேருந்துகளில் பகுதி நேர வேலை; வீட்டிலிருந்த படி சம்பாதிக்கலாம் என்று அலை பேசி எண்களுடன் போஸ்டர் ஒட்டி யிருப்பார்கள். இது பெரும்பாலும் டேட்டா என்ட்ரி பணி தான். பி.டி.எஃப். பைலை வேர்டு’ பைலாக மாற்றி செம்மைப்படுத்தித் தரவேண்டும். நீங்கள் வேலையை முடித்து கொடுத்தப் பின்பு வேலையில் திருப்தியில்லை என்றுச் சொல்லி ரிஜெக்ட் செய்துவிடுவார்கள் அல்லது தலைமறைவாகிவிடு வார்கள். இது உங்கள் உழைப்பில் குளிர் காயும் மோசடி.
* அடுத்ததாக உங்கள் உணர்வை குறி வைத்து ஏவப்படும் சென்டிமென்ட் மோசடிகளும் இருக் கின்றன. முகநூலில் அறிமுகமாகும் அழகான இளம் பெண் சில நாட்கள் பழக்கத்துக்கு பின்பு தனக்கு பெற்றோர் இல்லை என்றும் தாய் மாமன் தன்னை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார் என்றும் அலறு வார். பெரும்பாலும் இவர்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற தொலைதூர நகரங்களில் தான் இருப்பார்கள். ஒருநாள் வாழ்ந்தாலும் உங்களோடுதான் வாழ்க்கை என்கிற ரீதியில் நீளும் உணர்ச்சி மிகுந்த வசனங்களில் எதிராளி விழுந்துவிட்டது தெரிந்தால் அவரது வசதியைப் பொறுத்து விமான டிக்கெட்டுக்கான பணம் முதல் சொத்தை மீட்பதற்காக ரூ.10 லட்சம் வரை பணத்தை கறந்துவிடுவார்கள்.
* மேற்கண்டதில் இன்னொரு வகை ஆதரவற்றோர் இல்லங்கள். உங்கள் சம்பளத்தில் மாதம் ரூ.1,000 கொடுத்தால் போதும் என்று ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களின் பரிதாபமான நிலையை விவரிக்கும் புகைப்படங் கள், இல்லத்தின் விவரங்கள் ஆகிய வற்றை அனுப்பி வைப்பார்கள். இது தொடர்பான மின்னஞ்சல்கள் பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் இருந்து தான் வரும். நேரில் சென்று உறுதி செய்யாமல் உதவிக்கரம் நீட்டாதீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT