Published : 30 Nov 2014 12:02 PM
Last Updated : 30 Nov 2014 12:02 PM

தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது: மின்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் மின் உற்பத்தி, கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்துவருவ தாக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக மின் திட்டங்கள் தொடர்பாக சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதில் மின்வாரியத் தலைவர் கே.ஞானதேசிகன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

660 மெகாவாட் அளவிலான எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்கம் ரூ.4,956 கோடி மதிப்பீட்டிலும், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டத்தில் 2 அலகுகள் தலா 660 மெகாவாட்டில் ரூ.7,920 கோடி மதிப்பீட்டிலும் நிறுவப்படுகின்றன. இதற்கான பொறியியல், கொள்முதல், கட்டுமானப் பணிகளுக்கு ஆணை வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உடன்குடி அனல் மின் திட்டம் நிலை-1ல் 2 அலகுகளில் 660 மெகாவாட்டில் ரூ.10,121 கோடி மதிப்பீட்டில் நிறுவுவதற்கான ஆணை டிசம்பர் இறுதிக்குள் வழங்கப்படும். இந்த 3 புதிய மின் திட்டங்கள் மூலம் மொத்தம் 3,300 மெகாவாட் கூடுதல் மின் நிறுவுதிறன் ஏற்படுத்தப்படும்.

நடப்பு நிதி ஆண்டில் 1,529 மெகாவாட் மின்சாரம் நிறுவுதிறன் கூடுதலாக தமிழகத்துக்கு கிடைக்கும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 250 மெகாவாட் விரிவாக்கத் திட்டம் மூலம் 230 மெகாவாட் கிடைக்கும். தமிழ்நாடு மின் வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன கூட்டு முயற்சியான தூத்துக்குடி அனல் மின் திட்டத்தில் 387 மெகாவாட் கிடைக்கும். வல்லூர் அனல் மின் நிலைய 3-வது அலகில், 500 மெகாவாட் டிசம்பரில் வணிகரீதியாக மின் உற்பத்தி தொடங்கி, 350 மெகாவாட் கிடைக்கும். கூடங்குளம் அணு மின் நிலை யத்தில் இருந்து தமிழகத்தின் பங்கு 562 மெகாவாட் ஆகும்.

காற்றாலை மின்சார பயன் பாட்டுக்காக, ரூ.1,306 கோடி மதிப்பீட்டில் தப்பகுண்டு, ஆனைக்கடவு, ராசிபாளையம் ஆகிய 400 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள், இருவழி மின் பாதைகள் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

சென்னை மின் கட்டமைப்பை மேம்படுத்த கிண்டியில் 230 கி.வோ. துணை மின் நிலையம், கும்மிடிப்பூண்டி அருகில் தேர்வாய் கண்டிகையில் 400 கி.வோ. துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளும் டிசம்பர் இறுதிக் குள் நிறைவு பெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

ஆலந்தூரில் மெட்ரோ ரயில் சேவைக்காக 230 கி.வோ. துணை மின் நிலையம் ரூ.157 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இதை வரும் ஜனவரி இறுதிக்குள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சோழிங்க நல்லூர் ஒட்டியம்பாக்கத்தில் ரூ.148.6 கோடி மதிப்பீட்டில் 400 கி.வோ. துணை மின் நிலைய பணிகள் நடக்கின்றன. இது 2015 ஜூன் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும்.

ரூ.1,593 கோடி திட்ட மதிப்பீட் டில் புதுப்பிக்கத்தக்க மின்வழித்தட திட்டம், தேசிய பசுமை எரிசக்தி நிதி உதவி மற்றும் ஜெர்மனி நிதி உதவியுடன் ஒரு 400 கி.வோ. துணை மின் நிலையம், 230 கி.வோ. மின்மாற்றிகள் மற்றும் மின் பாதை மேம்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் மூலம், மின் உற்பத்தி பெருகி, சீரான மின் விநியோகம் கிடைக்கும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x