Last Updated : 14 Sep, 2016 11:01 AM

 

Published : 14 Sep 2016 11:01 AM
Last Updated : 14 Sep 2016 11:01 AM

சிவகாசியில் 13 மொழிகளில் காலண்டர் தயாரிப்புப் பணி தீவிரம்: 2017-ம் ஆண்டுக்கு புதிய ரகங்கள் அறிமுகம்

சிவகாசியில் காலண்டர்கள் தயா ரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. 2017-ம் ஆண்டுக்கான காலண்டர் கள் பல்வேறு புதிய ரகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது வியாபாரிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்சி, அரசு அலுவலகங்கள் என எங்கு சென்றாலும் அங்கு தினசரி, மாத காலண்டர்கள் தொங்கவிட் டிருப்பதை நம்மால் காண முடியும். பட்டாசு தயாரிப்பைத் தொடர்ந்து அச்சுக் கலையில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற சிவகாசியில் காலண்டர்கள் உற்பத்தி தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

சிவகாசியில் ஒரு காலண்டரை முழுமையாக தயாரித்து வழங்கும் 20 பெரிய நிறுவனங்கள் உள்ளன. அச்சுப் பதிப்பு, அட்டை தயாரிப்பு, வரைகலை, வடிவமைப்பு என பல் வேறு பணிகளை மேற்கொள்ளும் 300-க்கும் மேற்பட்ட துணை நிறு வனங்களும் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் 2 லட்சத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவகாசியில் தயாரிக்கப்படும் காலண்டர்கள் தமிழ்நாடு மட்டு மின்றி வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

காலண்டர்கள் தயாரிப்பில் ஆண்டுதோறும் புதுமையை அறி முகப்படுத்துவது சிவகாசியின் தனிச்சிறப்பு. அதேபோல் 2017-ம் ஆண்டுக்கும் புதிய வகை காலண் டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து சிவகாசியில் உள்ள பிரபல காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கே.ஜெய்சங்கர் கூறியதாவது:

ஆடிப்பெருக்கு தினத்தன்று காலண்டர் உற்பத்தி தொடங்கப் படும். வழக்கமாக கருப்பு வெள்ளை நிறத்தில் சதுரமான வடிவில் தினசரி காலண்டர் (கேக்குகள்) தயாரிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பல வண்ணத்தில், பல வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவை 2 இன்ச் முதல் 14 இன்ச் அளவுகள் வரை தயாரிக்கப்படு கின்றன.

முப்பரிமாண படங்கள்

2017-ம் ஆண்டுக்கு கோல்டன் பெட்பாயில்ஸ் காலண்டர்கள் அறி முகப்படுத்தப்பட்டு உள்ளன. இவை தங்க நிறத்தில் ஜொலிப்பதாலும், முப்பரிமாணத்தில் படங்கள் அச்சிடப்படுவதாலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவை 12- 18 இன்ச் முதல் 23- 36 இன்ச் வரை தயாரிக்கப்படுகின்றன. குறைந்த பட்சம் ரூ.130 முதல் அதிகபட்சமாக ரூ.1.500 வரை இவை விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் மகாகனி உங்கள் விருப் பம், பேன்ஸி மகாகனி, பேன்ஸி கமல், ஜெயின்ட் காலண்டர்கள், சுப்ரீம், டைகட் காலண்டர், மினி டை கட் காலண்டர், பாயில்ஸ் காலண்டர், ரியல் ஆர்ட் காலண்டர் என பல ரக காலண்டர்களும் பல வகைகளில் தயாரிக்கப்படுகின்றன.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் காலண்டர்கள் தயாரிக்கப்படுகின் றன.

மின்வெட்டு பாதிப்பு

தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம், வட மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இருப்பினும், இந்த ஆண்டு மூலப் பொருட்களான காகிதம், அச்சு மை, தொழிலாளர்களின் கூலி உயர்வு, மின்வெட்டு ஆகிய கார ணங்களால் காலண்டர் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என தெரிவித் தார்.

பட்டாசு உற்பத்தியைத் தொடர்ந்து சிவகாசிக்குச் சிறப்பு சேர்ப்பது அச்சகத் தொழில். இதன் மூலம் சிவகாசியில் இந்த ஆண்டு சுமார் 3.45 கோடி தினசரி மற்றும் மாத காலண்டர்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும் காலண்டர் உற் பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x