Published : 08 Mar 2017 09:56 AM
Last Updated : 08 Mar 2017 09:56 AM
மனித பிறப்பு மகத்தானது. பகுத்தறியும் பக்குவம் படைத்தது. கட்டமைக்கப்பட்ட சமூகத்தைக் கொண்டது. மனிதனால் மட்டுமே தனது சமூகத் துக்காக சிந்திக்க முடியும். மனிதனால் மட்டுமே தனது சமூகத்துக்காக செயல்பட முடியும். ஆனால், சமூகத் துக்காக எத்தனை பேர் சிந்திக்கி றார்கள்? எத்தனை பேர் செயல்படுகி றார்கள் என்பதுதான் கேள்வி.
சமூகத்துக்காக சிந்திக்க சமூகம் சார்ந்த அடிப்படை தகவல்களை அறிந் திருக்க வேண்டும். உங்கள் கிராமத்தில் மக்களின் வாழ்வாதாரங்கள் என்ன? நீர்நிலைகள் எத்தனை? விவசாய நிலங்கள் எவ்வளவு? என்ன விவசாயம் செய்கிறார்கள்? புறம்போக்கு நிலங்கள் எவ்வளவு? பொதுப் பயன்பாட்டு நிலங்கள் எவ்வளவு? அரசுப் பள்ளிகள், பால்வாடிகள், நூலகம், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகள், சுகாதார மையம், நியாய விலை கடைகள் உள்ளிட்ட சேவை கட்டமைப்புகள் என்ன இருக்கின்றன?
பேருந்து நிலையம், குடிநீர் தொட்டிகள், களத்து மேடு, சமூக நலக் கூடம், பூங்காக்கள் உள்ளிட்ட சமூக சொத்துக்கள் என்னென்ன இருக்கின்றன? மக்கள் எவ்வளவு பேர் வசிக்கிறார்கள்? எந்தெந்த சமூகத்தினர் வசிக்கிறார்கள்? துல்லியமாக வேண்டாம், தோராயமாகவாவது தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். கிராம நிர்வாக அதிகாரி அல்லது வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் இவை கிடைக்கும்.
அடுத்ததாக, இவை எல்லாம் எப்படி இருக்கின்றன என்பதை தெரிந் துக்கொள்ளுங்கள். மக்களின் வாழ்வாதாரங்கள், நீர் நிலைகள் பராமரிக்கப் படுகின்றனவா? ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றனவா? நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுகிறதா? கழிவுகள் கலக்கிறதா? கல்வி, மருத்துவ சேவை கட்டமைப்புகள் சிறப்பாக செயல்படுகின்றனவா? ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் வருகிறார் களா? பேருந்து நிலையம், குடிநீர்த் தொட்டிகள் உள்ளிட்ட பொது சொத்துக்கள் பராமரிக்கப்படுகின்ற னவா என்று தெரிந்துக்கொள்ளுங்கள். மது ஆலை, ரசாயன தொழிற்சாலை அல்லது மதுக்கடை ஏதேனும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனவா? நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றனவா? இவை எல்லாம் அறிந்து வைத்துக்கொள் ளுங்கள்.
இப்படி அடிப்படைகளை அறிந்துக் கொண்டால்தான் அத்துமீறல்களின் போது கேள்வி எழுப்ப முடியும். அடிப்படைகளையும் அறியாமல் கேள் விகளையும் எழுப்பாமல் இருப்பதே பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணம். இவ்வாறாக பெரும் பான்மைச் சமூகம் தனது சமூகப் பொறுப்புகளை தட்டிக் கழிப்பதா லேயே சுமைகளை வெகுசிலர் சுமக்க வேண்டியிருக்கிறது. ஊர்க் கூடி கேட்க வேண்டிய கேள்வியை சசிபெருமாள் ஒருவர் கேட்டார். அத்தனை பேரின் பாரத்தையும் தனியாளாக சுமந்தார். அதனாலேயே உயி ரையும் கொடுத்தார். அவரது மரணத் துக்கு பொறுப்பு அரசு மட்டும்தானா?
இன்றைக்கு அணு உலைத் திட்டம் ஆகட்டும், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகட்டும்... இன்று தமிழகம் சந்திக்கும் ஒவ்வொரு பெரிய பிரச்சினையுமே முளையிலேயே கிள்ளியிருக்க வேண் டியவை. ஒவ்வொன்றிலும் தும்பை விட்டு வாலைப் பிடித்துக்கொண்டி ருக்கிறோம். மேற்கண்ட எல்லாவற்றையும் உள்ளாட்சி அமைப்பு என்கிற அடிப்படை அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்ற இயலாது. நேர்மையானவர்கள், மாற்று அரசியலை எதிர் நோக்கும் இளைய தலைமுறையினர் அந்த அதிகாரத் துக்கு வராததால் புரையோடி சீழ்பிடித்துக் கிடக்கிறது நிர்வாகம்.
விவசாயத்தை எடுத்துக்கொள் வோம். பருவ நிலை மாற்றம், மழை யின்மை, வறட்சி இவை மட்டுமே பிரச்சினைகள் அல்ல. விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாற்றப்படுவதும், அரசின் பெரும் திட்டங்களுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதும் விவசாயத்தின் அழிவுக்கு முக்கியக் காரணங்கள். ஒரு குடியிருப்பை உருவாக்க குடியிருப்பு அமைப்பு வரைபட அங்கீகாரம் பெறுவது அவசியம். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பெருநகர வளர்ச்சிக் கழகங் கள், உள்ளூர் திட்டக் குழுமம், நகர ஊரமைப்புத் துறை ஆகிய அரசு துறைகள் மூலம் இதற்கான அங்கீகாரங்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்படும் அங்கீ காரங்கள் பெரும்பாலானவை ஊழல் களாலும் குளறுபடிகளாலும் நிறைந்து இருக்கின்றன.
சரி, இதுபோன்ற குளறுபடிகளை எவ்வாறு கண்டறிவது? நிறைய வழிகள் இருக்கின்றன. இதோ இந்தக் குளறுபடியைப் பார்ப்போம். படத்தில் காணப்படுவது மாமல்லபுரம் உள்ளூர் திட்டக் குழுமப் பகுதியின் 2021-ம் ஆண்டு வரைக்கும் வெவ்வேறு கால கட்டங்களில் அனு மதிக்கப்பட்ட நிலப் பயன்பாட்டு அங்கீகார வரைபடத்தின் ஒரு பகுதி. இதன் முழு வரைபடத்தை மாமல்லபுரம் உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தில் பெறலாம் அல்லது நகர ஊரமைப்பு இயக்ககத்தின் இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.
மாமல்லபுரம் உள்ளூர் திட்டக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர், செங்கல்பட்டு மண்டலத்தின் நகர ஊரமைப்புத் திட்டத்தின் துணை இயக்குநர், உதவி இயக்குநர், இணை இயக்குநர், ஆணையர், தமிழ் நாடு வீடுகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு செயலர் வரை கையெழுத்திட்டு அங்கீகரித்துள்ள வரைபடம் இது. வரைபடத்தில் கிராம எல்லைகள், நெடுஞ்சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வயல்வெளி கள், குடியிருப்பு பகுதிகளாக மாற்ற அங்கீகாரம் பெற்ற பகுதி கள் உள்ளிட்டவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இதில் பல்வேறு ஊராட்சிகளில் விவசாய வயல்வெளிகள் வீடுகள் நிறைந்த குடியிருப்புப் பகுதிக ளாக போலியாக மாற்றி காட்டியி ருக்கிறார்கள். அப்படி காட்டுவதன் மூலம் அடுத்தடுத்த விவசாயப் பகுதி களையும் குடியிருப்புப் பகுதிகளாக விரிவுப்படுத்துவதற்கான முறைகேடு இது. ‘நகரமயமாதல்’ என்னும் அரக்கனின் ஊழல் முகம் இது. இதனை கூகுள் செயற்கைக்கோள் வரைப்படத் தளத்துக்கு சென்றால் மிக எளிதாகக் கண்டுபிடிக்கலாம். குறிப்பாக, வரைபடத்தில் திருப் போரூர் அருகேயிருக்கும் இள்ளளூர் ஊராட்சியில் மஞ்சள் நிறமிடப் பட்ட குடியிருப்பு வீடுகளாக காட்டப்பட்டிருக்கும் பகுதிகள் கூகுள் செயற்கைக்கோள் தளத்தில் பசுமை யான வயல்வெளிகளாக இருப்பதைக் காணமுடியும். இதுமட்டுமல்ல, இன்னும் நிறைய இருக்கின்றன!
- தொடரும்...| எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT