Published : 28 May 2017 10:24 AM
Last Updated : 28 May 2017 10:24 AM
நாட்டிலேயே மிக நீளமாக கட்டப் பட்டுள்ள பாலத்தின் கட்டுமானப் பணிகளில் 17 ஆயிரம் டன் அள வுக்கு டால்மியா சிமென்ட் பயன் படுத்தப்பட்டிருப்பது பெருமிதம் தருவதாக அந்நிறுவனம் கூறி உள்ளது.
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத் திரா ஆற்றின் கிளை நதியான லோஹித் நதியின் குறுக்கே தோலா - சதியா பகுதிகளை இணைத்து நாட்டின் மிக நீளமான பாலம் கட்டப்பட்டுள்ளது. அசாம் - அருணாசலப் பிரதேசத்தை இணைக்கும் வகையில் 9.15 கி.மீ. நீளத்துக்கு இது கட்டப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26-ம் தேதி திறந்துவைத்தார். 60 டன் ராணுவ பீரங்கிகள்கூட கடந்து செல்லும் அளவுக்கு இப் பாலம் உறுதியாக கட்டப் பட்டுள்ளது.
இதன் கட்டுமானப் பணிக்கு டால்மியா சிமென்ட் (பாரத்) நிறு வனம் 17 ஆயிரம் டன் உயர் கிரேடு சிமென்ட் வழங்கியுள்ளது. இதன் மூலம், உற்பத்தித் துறையில் நம்பிக்கை டால்மியா சிமென்ட் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து டால்மியா பாரத் குழுமத்தின் மேலாண் இயக்குநர் புனீத் டால்மியா கூறியபோது, ‘‘1952-ல் ஹிராகுட் பாலம் கட்டியது முதல், துறைமுகங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள், விமான தளங்கள், நெடுஞ்சாலைகள், மின்திட்டங்கள் என நாட்டின் மைல்கல் திட்டங்கள் அனைத்திலும் டால்மியா சிமென்ட் டின் பங்கு உள்ளது. 1939-ல் தொடங் கப்பட்டு, கடந்த 78 ஆண்டுகளாக இந்த தேசத்தின் நம்பிக்கை மற்றும் நேர்த்தியில் எங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு உள்ளது’’ என்றார்.
‘‘வடகிழக்கு மாநிலங்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத் துக்கு வழிவகுக்கக்கூடிய இத்திட் டத்தில் டால்மியா சிமென்ட்டின் பங்களிப்பு இருப்பது பெருமிதம் தருகிறது’’ என்று குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மகேந்திர சிங்கி கூறினார்.
சிமென்ட், சர்க்கரை, சுத்திகரிப்பு என உற்பத்தி துறையில் ரூ.10 ஆயிரம் கோடி வர்த்தகத்துடன் டால்மியா பாரத் குழுமம் முன்னணி யில் இருக்கிறது. டால்மியா பாரத் நிறுவனத்தின் துணை நிறுவனமான டால்மியா சிமென்ட் (பாரத்) லிமிடெட், சிமென்ட் உற்பத்தியில் முன்னணியில் இருப் பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT