Published : 27 Feb 2017 05:08 PM
Last Updated : 27 Feb 2017 05:08 PM
அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் மார்ச் 20-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கே.பாலு தொடர்ந்த வழக்கில், "சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால், அவருக்கான தண்டனை மட்டுமே கைவிடப்பட்டுள்ளது. ஆனால், அவர் குற்றவாளிதான் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், ஊழல் வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதாவின் படம் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது. அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ஜெயலலிதாவின் பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே, அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிப்பதோடு அரசு திட்டங்களுக்கும் அவரது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இதே கோரிக்கையை முன்வைத்து திருவல்லிக்கேணி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த இரண்டு மனுக்களையும் விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி.ஜி.ரமேஷ், ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பாமக சார்பில் வழக்கறிஞர் பாலுவும், திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சனும் ஆஜராகி வாதாடினர். இந்த வழக்கில், மார்ச் 20-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT