Published : 26 Jun 2016 09:16 AM
Last Updated : 26 Jun 2016 09:16 AM
சென்னை ரயில்வே போலீஸில் உள்ள 300 காலிப்பணியிடங்களை நிரப்பாததால், பாதுகாப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பி, ரயில் நிலையங்களில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிடையே தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 8 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். ரயில்கள் வருவதில் காலதாமதம், சிக்னல்களில் கோளாறு, ரயில் நிலையங்களில் அடிப்படை வசதி கள் இல்லாதது உள்ளிட்ட ஏராள மான பிரச்சினைகளை ரயில் பயணிகள் அன்றாடம் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலை யத்தில் இளம் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தங்களுக்கு பாதுகாப்பு இல்லையோ என்ற அச்சத்தை ரயில் பயணிகளிடம் ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் ரயில்வே போலீஸார் தரப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் சென்ட்ரல், கடற்கரை, எழும்பூர், மாம்பலம், தாம்பரம், அரக்கோணம், திரு வள்ளூர் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும்தான் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில்வே போலீஸார் எழும்பூர், மாம்பலம், குரோம்பேட்டை, மறை மலைநகர், செங்கல்பட்டு என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஒவ்வொரு பிரிவிலும் குறைந்த பட்சம் 70 பேர் முதல் 90 பேர் வரை இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது ஒவ்வொரு பிரிவிலும் 40 பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ரயில் நிலை யங்களில் பயணிகளின் எண் ணிக்கை பல மடங்கு அதிகரித் துள்ளது. ஆனால், பாதுகாப்பு பணிகளை மேம்படுத்த போதிய ஆட்கள் நியமிக்கவில்லை. இத னால், எங்களுக்கு பணிச்சுமை கூடுவதுடன், பயணிகளின் பாது காப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. குறிப்பாக சென்னை ரயில்வே போலீல் கோட்டத்தில் மட்டுமே சுமார் 300 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்பி, கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினால் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக ரயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘நுங்கம்பாக்கம் போன்ற 30-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் சிசிடிவி கேம ராக்கள் பொருத்த வேண்டு மென மத்திய ரயில்வே துறையிடம் வலியுறுத்தியுள்ளோம். இதற்கும் மத்திய அரசு அனுமதி அளித் துள்ளது. நிதி ஒதுக்கிய வுடன் பணியை தொடங்கு வோம். மேலும், காலி யாகவுள்ள 300 காலிப்பணியிடங் களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT