Published : 14 Feb 2014 12:00 AM
Last Updated : 14 Feb 2014 12:00 AM

காவல், தீயணைப்பு, சிறை மற்றும் நீதித்துறைக்கு ரூ.6,353 கோடி ஒதுக்கீடு

வரும் நிதியாண்டில் காவல்துறை, தீயணைப்புத் துறை, சிறைத்துறை மற்றும் நீதித்துறைக்கான திட்டங் களுக்காக, 6,353 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் காவல்துறைக்கு மட்டும் 5,186 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக காவல்துறைக்காக 2010-11ம் ஆண்டில் 3,184.47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. வரும் 2014-15ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், இத்தொகை ரூ.5,186 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில், காவல் நிலையம், குடியிருப்புகள் மற்றும் பிற அலுவலகக் கட்டிடங்கள் கட்டுவதற்கு 571.67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தில், வரும் நிதியாண்டில் 130.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண் டுகளில், 24,503 புதிய காவலர் மற்றும் அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்

பட்டுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைத் திட்டம், முதல்வரின் சிந்தனையில் உதித்த உன்னதத் திட்டமாகும். ஏற்கெனவே உறுதியளித்தவாறு, இத்திட்டத்தில் 10,099 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தீயணைப்புத் துறையில் நடப்பு 2013-14ம் நிதி ஆண்டில், 101 மீட்டர் வான் நோக்கி உயரும் ஏணி கொண்ட இரண்டு ஊர்திகள், 10 நவீன ரக நீர் தாங்கி வண்டிகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த கருவிகளுக்கு 50.50 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் 189.64 கோடி ரூபாய் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறை வளாகங்களில் ஏற்கெனவே அமைந்திருக்கும் தொழிற் கூடங்களை மேம்படுத் தவும், உகந்த தொழில் பிரிவுகளில் புதிய தொழிற் கூடங்களை அமைக்கவும் வரும் நிதியாண்டிற்கு 194.66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையில், புதிய நீதிமன்றக் கட்டிடங்களையும் குடியிருப்புகளையும் அமைக் கவும், நீதித்துறை அமைப்புகளை மேம்படுத்திடவும் வரும் நிதியாண்டுக்கு 783.02 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x