Published : 18 Mar 2014 06:15 PM
Last Updated : 18 Mar 2014 06:15 PM
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக, இம்மாதம் 24-ம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்ட செய்தியில், 'நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணிகளில் ஈடுபடவும், பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் பொறுப்பாளர்களை தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ நியமனம் செய்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் நாளை சங்கரன் கோவிலில் முதலமைச்சர் பேச இருக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
அத்துடன், வருகிற 26 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார்கள். பிரச்சார பயண விபரம் விரைவில் வெளியிடப்படும்' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT