Published : 01 Aug 2016 04:59 PM
Last Updated : 01 Aug 2016 04:59 PM
கூடங்குள அணுமின் நிலைம்தான் உலகிலேயே பாதுகாப்பானதாகும் என்று ரஷ்யாவின் ரோஸாட்டம் நிறுவனத்தின் ஒரு பகுதியான ஏ.எஸ்.இ. குழுமத்தின் திட்ட இயக்குநர் விளாதிமிர் ஆஞ்சலேவ் தெரிவித்துள்ளார்.
இவர் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி வருமாறு:
ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையத்தில் சுனாமிக்குப் பிறகு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் விவகாரத்தையடுத்து கூடங்குளம் பாதுகாப்பு பற்றிய அச்சம் எழுந்துள்ளது. புகுஷிமா போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன?
புகுஷிமா நிகழ்வுக்குப் பிற்பாடு எழுந்த பாதுகாப்பு மேம்படுத்தல் தேவைகளை ஏற்கெனவே கொண்டுள்ள உலகின் முதல் அணுமின் உற்பத்தி நிலையம் கூடங்குளமாகும். மேலும் அது வெற்றிகரமாக இயங்கி வருகிறது. நாங்கள் யூனிட் 1 மற்றும் 2-ன் அடிப்படை தொழில்நுட்ப வடிவமைப்பை ஆராய்ச்சி செய்தோம். அதில் புகுஷிமா போன்ற நிகழ்வை தாங்கக்கூடியது என்பதை அறிந்தோம்.
எனினும், நாங்கள் மேலும் கண்டிப்பான சில தேவைகளை அதில் ஈடுபடுத்தியுளோம். இந்திய தரப்பிலும் சில விஷயங்கள் முன் வைக்கப்பட்டன, சில அளவுகோல்கள் கோரப்பட்டன, அவற்றையும் ஆய்வு செய்து மேம்படுத்த நாங்கள் பணி மேற்கொண்டோம். எனவே யூனிட் 3 மற்றும் 4 ஆகியவை கடுமையான பூகம்ப, வானிலை மற்றும் தொழில்நுட்ப தாக்கத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மின் உற்பத்தி யூனிட்களும் நவீன பழுதுகாண் அமைப்பொழுங்கு முறை கொண்டவையாகும். இது எதிர்பார்க்கப்பட்ட நடைமுறை நிகழ்வுகளை இயங்கத் தொடங்கும் முன்பே தடுக்கவல்லவை. எண்ணற்ற அதி தொழில் நுட்ப பாதுகாப்பு அமைப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அணு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு வடிவமைப்பை கூடங்குளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரியாக்டர் பிளாண்டிலிருந்து உஷ்ணம் வெளியேறுவதற்கான அமைப்பு, உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறிப்பிடத்தகுந்தவை. உதாரணமாக உஷ்ண அகற்ற அமைப்பு நீராவி ஜெனரேட்டரை தானாகவே குளிர்படுத்தும் முறைமை கொண்டது. இதில் பணியாளர் பங்கேற்பு தேவையில்லை. மேலும் இதில் ஆற்றல் சப்ளையும் தேவையில்லை. இன்னொரு தொழில்நுட்பம் ‘கோர் கேட்சர்’ ஆகும். இது இயக்கரீதியாக ஏற்படும் நிகழ்வுகளிலிருந்து சுற்றுச் சூழலை பாதுகாப்பதாகும்.
ரியாக்டர் பிளாண்ட் பூகம்பம், டொர்னாடோ, கடும் புயல் ஆகிய இயற்கை நிகழ்வுகளிலிருந்து பாதுகாக்கப்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது விமானம் விழுந்தால் கூட ஒன்றும் ஆகாது என்ற அளவுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே அணு மின் நிலையங்களில் உலகிலேயே இந்தியாவில் கூடங்குளம் மிகவும் பாதுகாப்பானது என்று உறுதியாக நாங்கள் கூற முடியும்.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தின் இன்னொரு அம்சம் என்னவெனில், உயிரியல் பன்மைக்கு எந்த வித தீங்கும் ஏற்படாதவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
யூனிட் 1 மற்றும் 2 ஆகியவற்றின் தற்போதைய தகுதி நிலை என்ன என்பதை எங்களுக்கு கூற முடியுமா?
திட்டமிட்ட பழுது தடுப்பு மற்றும் மறுஎரிபொருள் நிரப்புதல் நடவடிக்கை முடிந்த பிறகு கடந்த அக்டோபர் 2013-ல் யூனிட் 1 மின் உற்பத்தியை தொடங்கியது. பிப்ரவரி 3-ம் வாரத்திலிருந்து ஸ்திரமான மின் உற்பத்தி மட்டத்தை கடைபிடித்தது, மேலும் வடிவமைப்பு சுமையான 995 மெகாவாட் என்பதிலிருந்து 1003-1009 மெகாவாட் மின்சுமையாக இருந்தது. டிசம்பர், 2014 முதல் வணிக மின் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட யூனிட் 1, இது வரை 1006 கோடி மெகாவாட் மின் உற்பத்தி செய்துள்ளது. மேலும் கூடங்குளம் உற்பத்தி செய்த மின்சாரத்திற்கான மின்கட்டணம், 2010-11-ல் இந்திய அரசு நிர்ணயித்ததே.
யூனிட் 2 நிலவரம்?
மே மாதம் எரிபொருள் நிரப்புதல் நிறைவடைந்தவுடன் ஜூலை 10. 2016-ல் யூனிட் 2 தனது அணு எதிர்வினை நடவடிக்கையில் சுய தாங்கு சக்தியை 4 நாட்களுக்கு முன்னதாகவே அடைந்தது. இந்திய அணு மின் கார்ப்பரேஷன் அளித்த விவரங்களின் படியும் ரஷ்ய அதிகாரிகள் உத்தேசித்தின்படியும் ஆகஸ்டில் யூனிட் 2 மின் உற்பத்தியைத் தொடங்கி விடும்.
இத்தனை ஒத்திப்போடுதல்களுக்கான காரணம் என்ன?
லைட்-வாட்டர் ரியாக்டர்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை பரிசீலித்தோமானால், விவிஇஆர்-1000 ரியாக்டர்கள் முதன் முதலில் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதனை அமைக்க எதிர்பார்த்ததை விட கால தாமதம் ஏற்பட்டது. ரஷ்யாவில் திட்டக் கட்டுமான கால அளவின்படிதான் முதலில் திட்டமிடப்பட்டது, ஆனால் இந்தியாவில் சில குறிப்பிட்ட பணிகளால் தாமதம் ஏற்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் இந்தியர்கள், ரஷ்ய நிபுணர்கள் இணைந்து பணியாற்றும் அனுபவம் பெற வேண்டும் என்ற தேவை கருதியும் ஒத்திப் போடுதல் நிகழ்ந்தது.
யூனிட் 3 மற்றும் 4 நிலவரம்?
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய அனு மின் நிறுவனம் மண் அகழ்தல் மற்றும் யூனிட் 3, 4 கட்டுமானப் பணிகளுக்கான குழி ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை தொடங்கியது. இதற்காக பின்வரும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி செயல்வடிவமும் பெற்றது: நீண்ட கால உற்பத்தி உபகரணங்கள் வழங்கல், முதல் முன்னுரிமை வழங்கல்; விவரமான வடிவமைப்பு ஆவணமாக்கம்; ரஷ்யாவிலிருந்து அனைத்து பிற உபகரணங்களை பெறுதல், மற்ற நாடுகளிலிருந்து வழங்கல்கள் தொடர்பான வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரோஸாட்டம் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
2015 நவம்பரில் யூனிட் 5 மற்றும் 6-ற்காக இந்தியாவிடம் ரஷ்யா தொழில்நுட்ப மற்றும் வணிக ஒப்பந்தங்களை கோரியது. இதில் யூனிட் 5 மற்றும் 6-ற்கான வடிவமைப்பு இருதரப்பிடையேயும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இது விவிஇஆர்-1000 திட்டமாகும். பொது சட்டக ஒப்பந்தத்திற்கு முன்னதாக யூனிட் 5 மற்றும் 6 கட்டுமானத்திற்கான வரைபடம் பிப்ரவரி 2016-ல் உருவாக்கப்பட்டது. பொது சட்டக ஒப்பந்தம் இந்த ஆண்டு செப்-நவம்பரில் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
கூடுதல் அணு உலைகளுக்கான கூடங்குளம் அல்லாத பிற இடங்கள் பற்றி...
2014, டிசம்பர் 11 அன்று அணு சக்தியை சமூகப் பயன்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டன. இதன் படி அடுத்த 20 ஆண்டுகளில் ரஷ்ய வடிவமைப்பு அணு மின் நிலையங்கள் 12-ஐ இந்தியாவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 25, 2015-ல் பிரதமர் மோடி ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்ட போது அணு மின் நிலையங்களை அமைக்க இந்தியாவில் இன்னொரு இடம் ஒதுக்குவது பற்றி இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த புதிய இடத்தில் விவிஇஆர்-1200 வகை அணு உலைகள் உயர் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்படவுள்ளன. தற்போது ரஷ்யா வடிவமைத்த 6 அணு உலைகளை கட்டமைப்பதற்கான இட ஒதுக்கீடு பற்றி இந்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த இடம் பற்றிய விவரங்களை விரைவில் அறிவோம் என்று கருதுகிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT