Published : 04 Jul 2016 09:09 AM
Last Updated : 04 Jul 2016 09:09 AM
சென்னையில் திருவான்மியூர் அருகே நேற்று முன்தினம் அதிகாலை சொகுசு கார் மோதியதில் கூலித் தொழி லாளி ஒருவர் உயிரிழந்தார். மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை அக்கம்பக்கதினர் விரட்டிச் சென்று மடக்கினர். காரை ஓட்டி வந்த ஐடி ஊழியரான ஐஸ்வர்யா மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. உடன் இருந்த அவர் தோழிகள் இருவரும் மது அருந்தி இருந்ததாக அவர்களை பிடித்த பொதுமக்கள் தெரிவித்துள் ளனர். ஐஸ்வர்யா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்களை அதிர்ச்சிக்குள் ளாக்கிய இந்த சம்பவத் துக்கு அந்தப் பெண் போதையில் வாகனத்தை இயக்கியதே காரணம் என சொல்ல வேண்டியதில்லை.
தற்போது சென்னை மட்டுமல்லாது மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற பெரு நகரங்களில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடமும் மதுப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலை பெருநகரங்களைத் தாண்டி தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் பரவி வருகிறது.
அந்த வகையில், கோவையில் உள்ள சொற்ப ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடம் கூட மதுப் பழக்கம் மெல்ல பரவ ஆரம் பித்துள்ளது என எச்சரிக்கிறார்கள் கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற் றும் குடிநோய் ஒழிப்பு மையத்தினர்.
கோவையில் சரவணம்பட்டி, பீளமேடு ஐடி பார்க் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 5 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். மாதத்தில் குறிப் பிட்ட நாட்களில், நகரின் மையத்தில் உள்ள நட்சத்திர அந்தஸ்து பெற்ற சில முக்கிய ஹோட்டல்களில் ஆண், பெண் பேதமின்றி கூடி மது அருந்துகிறார்கள். அவர்களில் 10-க்கு 7 பேர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள்தான். மீதி 3 பேரும் சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள் என கூறப்படுகிறது.
ஐ.டி., பிபிஓ கம்பெனியில் பணி புரியும் இளைஞர் ஒருவர் கூறும் போது, ‘‘இந்த மாதிரி கலாச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வெளி மாநில, வெளிநாடுகளைச் சார்ந்தவர் களாகவே உள்ளார்கள். அவர்கள் கம்பெனிக்கு உள்ளூர் காரர்களை அழைப்பதும் நடக்கிறது” என் றார்.
கல்லூரி பொறுப்பாளர் ஒருவர் கூறும்போது, ‘‘கோவையில் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மட்டும் 150-க்கும் மேற்பட்டவை உள்ளன. அவற்றில் சுமார் 5 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில் பாதிக் கும் மேற்பட்டோர் பெண்கள். அதில் 5 ஆயிரம் பெண்களாவது மது அருந்துபவர்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்து பவர்கள். பெரும்பாலான கல்லூரிகள் நகரத் தின் வெளிப்புறங்களில் உள் ளன. கல்லூரி விடுதிகளில் தங்குவதை பெரும்பாலான மாணவ, மாணவிகள் விரும்புவது இல்லை. வெளியில் வீடு எடுத்து கூட்டாக தங்குகின்றனர். அதன் மூலம் ஒருவர் பழக்கத்தை இன்னொருவருக்கு தருகிறார்கள்.
2 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் போதையில் சாலையில் விழுந்து கிடந்தார். அவர் மது அருந்தி இருந்தார். கூடவே கஞ்சாவும். அவரைப் பிடித்து விசாரித்ததில் அவருக்கு அந்தப் பழக்கத்தை கற்றுக் கொடுத்த சரவணம்பட்டி, பீளமேடு பகுதியில் 6 மாணவர்கள் சிக்கினர். பெண்ணை கருணை அடிப்படையில் விட்டுவிட்டு மாணவர்கள் மீது மட்டும் போலீஸார் வழக்கு போட்டனர்’’ என்றார்.
மருத்துவத்துறை பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ‘‘பொதுவாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (OESTROGEN) என்ற ஹார்மோனும், ஆண்களுக்கு ஆண்ட்ரோஜென் (ANDROGEN) என்ற ஹார்மோனும் சுரப்பதைப் பொறுத்து பெண் தன்மையும், ஆண் தன்மையும் கூடும். நம் உணவு முறை மாற்றத்தால் பெண்களுக்கு அவர்களுக்கான ஹார் மோன் தன்மை குறைந்து ஆண் களுக்கான தன்மை கூடுதலாக தூண்டப்படுகிறது. அது கூடக்கூட ஆண்கள் செய்யக்கூடிய விஷயத்தை தாம் செய்தால் என்ன என்ற மனோ பாவம் அதிகரித்து வருகிறது. அதில் ஒன்றுதான் மது அருந்தினால் என்ன? என்ற மனப்பான்மை’’ என்றார்.
கஸ்தூரிபா காந்தி நினைவு குடிநோய் போதை நீக்கும் சிகிச்சை மையம் கோவையில் 20 ஆண்டாக செயல்படுகிறது. அதில் இதுவரை குடிநோயாளிகள் சுமார் 7 ஆயிரம் பேருக்கு மேல் சிகிச்சை பெற்றுள் ளார்கள். இந்த மையத்தின் மருத்து வர் ஸ்ரீனிவாசன் கூறும்போது, ‘‘நண் பர்களுக்காக, ஜாலிக்காக, கஷ்டத் துக்காக, எப்போதாவது குடிப்பது என்ற நிலை மாறி தினந்தோறும் குடிப்பது, குடிக்காமல் இருக்க முடியாது; குடித் தால்தான் எதையும் செய்ய முடியும் என்று வரும் நிலையே குடிநோய் நிலை.
அந்த நிலைக்கு வரக்கூடிய வர்கள்தான் எங்களிடம் வருகிறார்கள். அப்படி இதுவரை ஆண்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தார்கள். சமீப காலங்களில் பெண்களும் வர ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் பெரிய நிறுவனங்களில் கைநிறைய சம்பாதிப் பவர்களாக உள்ளார்கள்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT