Published : 13 Mar 2014 12:00 AM
Last Updated : 13 Mar 2014 12:00 AM

சென்னை குடும்பநல நீதிமன்றத்துக்கு இனி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் 4 குடும்ப நல நீதிமன்றங்கள், இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அலுவலகங்களுக்குச் செல்லும் மனுதாரர், எதிர்மனுதாரர்கள் வார விடுமுறை நாள்களில் விசாரணைக்கு வர வசதியாகவும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விடுமுறை கால நீதிமன்றம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 2010-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதியிலிருந்து சென்னை குடும்ப நல நீதிமன்றம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கி வந்தது.

எனினும் இதற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. வார இறுதி நாட்களில் வழக்கு தொடர்பான பிற பணிகளையோ, குடும்பப் பணிகளையோ கவனிக்க இயலவில்லை என்றும், எனவே வார விடுமுறை நாள்களில் குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4 குடும்ப நல நீதிமன்றங்களும் வார இறுதியில் இனி சனிக்கிழமை மட்டுமே இயங்கும் என்று தலைமைப் பதிவாளர் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இதன் மூலம் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x