Published : 20 Sep 2016 11:20 AM
Last Updated : 20 Sep 2016 11:20 AM

பழங்குடியினர் மொழிக்கான அகராதி தயாரித்த ஆசிரியைகள்: அரசு அங்கீகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பழங்குடியினர் மொழிக்கான அக ராதியைத் தயாரித்து, கோத்தகிரி பள்ளி ஆசிரியைகள் சாதனை படைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், தோடர், இருளர், குரும்பர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் என 6 பண் டைய பழங்குடியினர் வசிக்கின்ற னர். இவர்களின் மொழி, பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன. எழுத்து வடிவில் இல்லாததால், இவர்களின் மொழியை பழங்குடியினர் அல்லா தோர் கற்பது கடினமாக உள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்து வரும் சிலர் மட்டுமே கற்றுள்ளனர்.

நீலகிரி மாவட்ட ஆதிவாசிகள் நலச்சங்கம் சார்பில், கோத்தகிரியில் விக்டோரியா ஆம்ஸ்டிராங் நினைவு தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, பழங்குடியின மாணவர்கள் படிக்கின்றனர்.

இங்கு பணிபுரியும் ஆசிரியைகள் ஏ.காயத்ரி, பி.தேன்மலர் ஆகியோர், கோத்தர், தோடர், இருளர் மற்றும் குரும்பர் மொழிகளில் தலா 300 சொற்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் மொழி பெயர்த்து அகராதி தயாரித்துள்ளனர். இதனால், பழங் குடியினர் அல்லாதோர் அவர்களின் மொழியை அரிய வாய்ப்பு கிடைத் துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியைகள் கூறியதாவது: கோத்தகிரி, குன்னூர், உதகை பகுதிகளில் கோத்தர், தோடர், இருளர், குரும்பர் ஆகிய பழங்குடியினரின் மொழியை அறிந்து கொள்வது பெரும் சிரம மாக உள்ளது. பள்ளி நிர்வாகி ரோஸ்லின் மில்ஜி, முதல்வர் சண் முகம், துணை முதல்வர் பூவிழி, நீலகிரி மாவட்ட ஆதிவாசிகள் நலச் சங்கச் (நாவா) செயலாளர் ஆல்வாஸ் ஆகியோர் பழங்குடி யினரின் மொழிச் சொற்களைக் கொண்டு அகராதி தயாரிக்கலாம் என ஆலோசனை வழங்கினர்.

அவர்கள் அளித்த ஊக்கத்தால் ஆய்வைத் தொடங்கினோம். முத லில் அன்றாடம் பயன்படுத்தும் 50 சொற்களைக் கொண்டு, அகராதி தயாரிக்க முடிவு செய்தோம். பள்ளியில் உள்ள ஆசிரியைகளுக்கு பூக்கள், பழங்கள், காய்கள், உடல் பாகங்கள், செயல்பாடு ஆகிய தலைப்புகளில் சொற்களை ஆங்கிலம், தமிழில் மொழி பெயர்க்க வலியுறுத்தினோம். இதற்கு பலன் கிடைத்தது.

தற்போது 300 சொற்களுக்கான அகராதி தயாரித்துள்ளோம். பழங் குடியினர் மொழி மிகவும் கடின மானது. ஒவ்வொரு சொற்களும், ஒலி அமைப்பில் வேறுபடுகின்றன. மொழி கலப்பால், தற்போதைய தலைமுறையினருக்குப் பல சொற் கள் தெரியவில்லை. இதனால், அவர்களின் மூதாதையர்களைச் சந்தித்து சொற்களைச் சரி பார்த்துக் கொண்டோம். 2 மாதங்களில் அக ராதி தயாரிக்க முடிந்தது. இதனை, மேலும் விரிவுபடுத்த உள்ளோம் என்று அவர்கள் கூறினர்.

பேச்சு வழக்கிலேயே பழங்குடி யினர் மொழி உள்ளதால், அவர் களது வாழ்வியலை ஆவணப் படுத்துவதில் சிக்கல் நிலவி வந் தது. இந்நிலையில், இந்த ஆசிரியைகளின் முயற்சியால் பழங்குடியினரின் மொழியை அறிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியைகளின் இந்த மகத்தான பணியை அரசு அங்கீகரிக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.



.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x