Published : 08 Jul 2016 08:36 AM
Last Updated : 08 Jul 2016 08:36 AM
ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த மொஷிருதின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் அவரது குடும்பத்தாரிடம் மேற்கு வங்க தீவிரவாத ஒழிப்பு நுண்ணறிவுப் பிரிவு அலுவலர் நேற்று தீவிர விசாரணை மேற்கொண்டார். அவரது வீட்டில் சிக்கிய மடிக் கணினி, மேற்குவங்க போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டம் லாபூரைச் சேர்ந்தவர் முகமது மொஷிருதின் (எ) முஷா(25). ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு டன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, மேற்குவங்க மாநிலம் லாபூரில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் திருப்பூர் மங்கலம் சாலையில் கோழிப் பண்ணை பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்திக்கொண்டு, அங்கேயே குடும்பத்துடன் தங்கியிருந்தது அம்பலமானது.
இதையடுத்து, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தீவிரவாத ஒழிப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர் போயஸ், மேற்கு வங் கத்தில் இருந்து திருப்பூருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு, மொஷிருதின் மனைவி ஷாகிரா, மங்கலத்தில் வசிக்கும் மூத்த அண்ணன் மினாஜூதீன் மியா(26) மற்றொரு சகோதரர் அசதுல்லா மியா(24) ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி உள்ளார். மேலும், திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் வைத்து ஷாகிரா மற்றும் மினாஜூதீன் மியாவிடம் நேற்று பகல் முழுவதும் தொடர் விசாரணை நடைபெற்றது.
இடம்பெயரும் குடும்பம்
மொஷிருதின் தங்கியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் காலி செய்யச் சொல்லியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது சகோதரர் அசதுல்லா மியா நேற்று கடையில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி காலி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் கூறும்போது “குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் மொஷிரு தின். தமிழ், இந்தி, உருது, ஆங்கிலம் உட்பட 8 மொழிகள் அவருக்குத் தெரியும். போலீஸாரின் மேல்விசாரணைக்காக கடை மற்றும் வீட்டை காலி செய்துவிட்டு அண்ணி ஷாகிரா மற்றும் அவரது குழந்தைகள் தமிழரசி (எ) மார்ஜி யம் (5), இளவரசி (எ) ஆபியா(2) ஆகியோருடன் மேற்கு வங்கம் செல்ல உள்ளோம்” என்றார்.
மடிக்கணினியில் ஆதாரங்கள்?
உளவுத்துறை போலீஸார் கூறும் போது, ‘‘மொஷிருதின் வீட்டில் இருந்து கத்தி, மடிக்கணினியை திருப்பூர் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றை தீவிரவாத ஒழிப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் வசம் ஒப்படைத்தனர். வீட்டில் கைப்பற்றப்பட்ட மடிக்கணினி முக்கிய ஆதாரமாக உள்ளது. மடிக்கணினியை சோதித்தால், அவருடைய நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆதாரங் கள் கிடைக்கலாம்” என்றார்.
திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் எம்.என்.மஞ்சுநாதா ‘தி இந்து’விடம் கூறும்போது, “பி.ஏ. பட்டப் படிப்பை ஓர் ஆண்டு மட்டும் படித்துள்ளார் மொஷிரு தீன். அதற்குமேல் அங்கு அவர் படிக்கவில்லை.
ஆனால், சமூக வலைத் தளங்களை நன்கு பயன் படுத்தி இருக்கிறார். விசாரணையில் முக்கிய ஆதாரமாக மடிக்கணினி இருக்கலாம்” என்றார்.
முதல்வருக்கு கடிதம்
இதற்கிடையே, கொங்குநாடு ஜனநாயக் கட்சித் தலைவர் ஜி.கே.நாகராஜ், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், “திருப்பூரில் தங்கி இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதிக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, ஆதார் அட்டை போன்றவை வழங்கப்பட்டு இருக் கின்றன.
தீவிரவாதத்தில் தொடர்பு உடையவர்களுக்கு இவற்றை வழங்கிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT