Published : 01 Nov 2014 10:43 AM
Last Updated : 01 Nov 2014 10:43 AM

ஞானதேசிகனின் முடிவை மன நிறைவோடு வரவேற்கிறேன்: முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் பேட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த ஞானதேசிகன் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளரான ஞானதேசிகன் நேற்று காலை நிருபர்களை சந்தித்து, கட்சி மேலிடம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது நேரடியாக புகார்களை கூறினார்.

இதையடுத்து ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு திரண்டனர். அவர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வாசன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

2011-ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த அப்பாவி மீனவர்களை பொய் வழக்கு போட்டு இலங்கை அரசு கைது செய்தது. இதை யடுத்து, ஈவு இரக்கமின்றி தூக்குத் தண்டனை விதித்துள்ளது. இது கண்டனத்துக்குரியது.

மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு இனிமேலாவது விழித்துக் கொள்ள வேண்டும். இலங்கை யிலுள்ள தமிழக மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தனது பதவியை ராஜினாமா செய்வ தாக நிருபர்களிடம் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தொண்டர் களின் மனநிலையை பிரதிபலித் துள்ளார். இதனை நான் மன நிறைவுடன் வரவேற்கிறேன்.

மேலும் பெருந்தலைவர் காம ராஜர், மக்கள் தலைவர் மூப்ப னார் மற்றும் தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தில் பணி யாற்றி மறைந்த மற்ற மூத்த தலை வர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆசியுடன்தான் தமிழகத்தில் காங்கிரஸை பலமான இயக்கமாக மாற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டதற்கு, ‘இன்னும் இரண்டொரு நாட்களில் அதுபற்றியெல்லாம் தெரிய வரும்’ என்று வாசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x