Published : 26 Feb 2017 10:31 AM
Last Updated : 26 Feb 2017 10:31 AM
வட சென்னை கூடுதல் காவல் ஆணை யர் ஸ்ரீதர், விரைவில் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அப்போது உளவுத்துறை ஐ.ஜி.யாக சத்தியமூர்த்தி இருந்தார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட தொடங்கிபோது சத்திய மூர்த்தி மாற்றப்பட்டு அவருக்கு பதில் காவலர் நலப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே, சசிகலாவின் நம் பிக்கைக்குரியவரான எடப்பாடி பழனிசாமி, புதிய முதல்வராக பதவியேற்றார் இதைத் தொடர்ந்து டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி ஏற்ற 10 நாட்களிலேயே மாற்றப்பட்டார். அந்த இடம் தற்போது காலியாக உள்ளது.
மாநில முதல்வருடன் நேரடி தொடர்பில் இருப்பவர், கூடுதல் டிஜிபி, டிஜிபி அந்தஸ்தில் உள்ளவர் களிடம்கூட கேள்வி கேட்கும் அதி காரம் உள்ளவர் என்பதால் உளவுத் துறை ஐ.ஜி. பதவிக்கு செல்வாக்கு அதிகம். இதனால், இந்தப் பதவிக்கு எப்போதும் போட்டி இருக்கும். சென்னை நுண்ணறிவு பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தாமரைக் கண்ணன், உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது.
பின்னர், கூவத்தூரில் எம்எல்ஏக் களுக்கு பாதுகாப்பு வழங்கிய வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் ஆகியோரது பெயர்களும் பரிசீலிக் கப்பட்டன. அந்தப் பட்டியலில் தற்போது முன்னணியில் இருப்பவர் வட சென்னை கூடுதல் காவல் ஆணை யர் ஸ்ரீதர். தஞ்சாவூரைச் சேர்ந்தவர். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்களை இவரது தலைமையிலான போலீ ஸாரே அப்புறப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT