Published : 04 Jan 2017 10:03 AM
Last Updated : 04 Jan 2017 10:03 AM
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்துக்கான அங்கீகாரத்தை தேசிய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் புதுப்பிக்காததால், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கருத்து நிலவுகிறது.
சென்னை சைதாப்பேட்டையில் 1868-ல் வேளாண்மைப் பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர் அது வேளாண்மைக் கல்லூரியாக மாறி, கோவைக்கு மாற்றப்பட்டது. 1971-ல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட் டது. தற்போது 13 அரசு வேளாண் மைக் கல்லூரிகள் மற்றும் 19 தனியார் கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல் படுகின்றன.
வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி, புதிய ரகங்கள் கண்டு பிடிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளில் சிறந்து விளங்கியதால், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தேசிய அளவில் சிறந்த பல்கலைக் கழகமாகத் திகழ்ந்து, பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை யால் உருவாக்கப்பட்டுள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்), தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகத்தை அங்கீ கரித்துள்ளது.
இதன்மூலம் பல்கலைக் கழகத்துக்கு கல்வி, ஆராய்ச்சிக் காக கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கப்படும். தொழில்நுட்ப உதவிகள், நாடு முழுவதும் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங் களுடன் ஒருங்கிணைப்பு, புதிய ரகங்களைக் கண்டுபிடிக்க ஊக்கு விப்பு உள்ளிட்ட உதவிகளும் செய்யப்படும்.
கடந்த 2009-ம் ஆண்டு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துக்கு ஐசிஏஆர் அங்கீகாரம் வழங் கியது. 2014-ல் இந்த அங்கீ காரத்தைப் புதுப்பித்திருக்க வேண் டும். ஆனால், பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அங்கீகாரத்தைப் புதுப்பிக்க ஐசிஏஆர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
ஐசிஏஆர் நிதியுதவி வழங்கும் ஆய்வுத் திட்டத்துக்கான பேராசிரி யர்கள் மற்றும் ஆய்வாளர்களை, பல்கலைக்கழகத்தில் பல்வேறு புதிய பாடப் பிரிவுகளை அறி முகம் செய்வதற்காகப் பயன்படுத் தியதாகவும், இதனால் அவர்களால் ஆய்வுப் பணிகளில் உரிய கவனம் செலுத்த முடியவில்லை என்றும் ஐசிஏஆர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் கூறும்போது, “ஐசிஏஆர் அங்கீகாரத்தைப் புதுப் பிக்காததால், வளர்ச்சி நிதியாக வழங்கும் பல கோடி ரூபாய் கிடைக்காமல் போகும். வெளி மாநிலங்களில் இருந்து வேளாண் பல்கலைக்கழகத்துக்கும், இங்கி ருந்து வெளிமாநிலங்களுக்கும் மாணவர்கள் உயர்கல்வி, ஆராய்ச் சிக்குச் செல்வது தடைபடும். ஐசிஏஆர் அங்கீகாரத்தைப் புதுப் பிக்காதது வெளியில் தெரிந்தால், பல்கலைக்கழகத்துக்கு நிதி வழங்கும் பிற அமைப்புகளும் நிதி வழங்குவதை நிறுத்திக்கொள்ளும். இந்தப் பல்கலைக்கழக மாணவர் களின் உயர் கல்வி, வேலை வாய்ப்பு பாதிக்கப்படும். பல்கலைக் கழகத்தின் நம்பகத்தன்மை குறைந்து, ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும்” என்றார்.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.கந்தசாமி கூறும்போது, “ஐசிஏஆர் சுட்டிக் காட்டிய குறைபாடுகளைச் சரி செய்யாமல் இருப்பதால், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு வேளாண் பல்கலைக்கழகத்துக்குக் கிடைக் காமல் போய்விட்டது. இதனால், ஆராய்ச்சிப் பணிகள் பாதிக்கப் பட்டு, புதிய ரகங்கள் வெளியிட முடியாமல் போகும். எனவே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.
வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி கூறும் போது, “வேளாண் பல்கலைக் கழகம் தொடர்ந்து சிறப்பாக செயல் பட்டு வருகிறது. ஆசிரியர் நியமனங்கள், பாடப் பிரிவுகள் தொடங் கப்பட்டதில் எவ்வித விதிமீறலோ, முறைகேடோ கிடையாது. மாண வர்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தி செயல்படுகிறோம். ஐசிஏஆர் சுட்டிக்காட்டியவை தொடர்பாக நாங்கள் விளக்கக் கடிதம் அனுப்பிவிட்டோம். அவர்க ளும் ஏற்றுக்கொண்டு, நிதி வழங்கி யுள்ளனர். ஓரிரு மாதங்களில் அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டு விடும். இந்தப் பிரச்சினையால், மாணவர்களுக்கோ அல்லது ஆராய்ச்சிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பல்கலைக்கழகத் தின்கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிலையங்களில் தொடர்ந்து புதிய ரக விதை நெல் உள்ளிட் டவை கண்டுபிடிக்கப்படுகின்றன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT