Published : 06 Jun 2016 03:03 PM
Last Updated : 06 Jun 2016 03:03 PM
தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததாக தொடர்பாக பதிவான இரண்டாவது வழக்கில் கரூர் அன்புநாதனுக்கு முன்ஜாமீன் வழங்கி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
முன்ஜாமீன் கோரி அன்புநாதன் தாக்கல் செய்த மனு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதி வேலுமணி, பணம் பதுக்கி வைத்திருந்தது தொடர்பான 2வது வழக்கில் முன்ஜாமீன் வழங்கினார். வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதேபோல் முதல் வழக்கில் பெற்ற முன்ஜாமீனை கீழ்கோர்ட்டில் ஆஜராகி உறுதிப்படுத்துவதற்கு அன்புநாதன் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. முன்ஜாமீனை உறுதிப்படுத்து 2 வார காலம் அவகாசம் வழங்கப்பட்டது.
முன்ஜாமீன் மனு விவரம்:
அன்புநாதன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், "கரூர் அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் பி.அன்புநாதன்(46). இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், "அய்யம்பாளையத்தில் என் வீடு, கிடங்கில் 22.4.2016-ல் தேர்தல் பறக்கும்படை போலீஸார் சோதனை நடத்தி ரூ.10 லட்சத்து 33 ஆயிரத்து 820, வருமானவரித் துறையினர் ரூ.4.77 கோடி பறி முதல் செய்ததாகவும், வாக்காளர் களுக்கு வழங்குவதற்காக இப் பணத்தை பதுக்கி வைத்திருந்த தாகவும் வேலாயுதம்பாளையம் போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்ற கிளை எனக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.
ஆனால் 20 நாட்கள் கழித்து இதே சம்பவம் தொடர்பாக வேலா யுதம்பாளையம் போலீஸில் மண் மங்கலம் வட்டாட்சியர் மற்றொரு புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் என் மீது வருமான வரிச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் வருமானவரிச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்க வட்டாட்சியருக்கு அதிகாரம் கிடையாது. வருமானவரி ஆணையரின் முன் அனுமதி பெறாமல் விசாரணை நடத்த முடியாது.
என் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கெனவே வருமானவரித் துறையிடம் உரிய விளக்கம் அளித்துள்ளேன். எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதனை ஏற்று அவருக்கு 2-வது வழக்கிலும் இன்று (திங்கள்கிழமை) முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT