Last Updated : 18 Mar, 2017 10:27 AM

 

Published : 18 Mar 2017 10:27 AM
Last Updated : 18 Mar 2017 10:27 AM

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வாழை மட்டை, கிழங்கு மாவில் தத்ரூபமாக சிலை வடிப்பு

இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படாத வகையில் வாழை மட்டை, கிழங்கு மாவைக் கொண்டு தத்ரூபமாக வடிக்கப்படும் சிலை களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக வனப்பகுதி, பொட்டல் காடு, ஊரைவிட்டு ஒதுங்கியுள்ள பகுதிகளில் பெரும் பாலான குலதெய்வ கோயில்கள் உள்ளன. மகாசிவராத்திரி, ஆடி அமாவாசை, மாசி பவுர்ணமி மற்றும் முக்கிய நாட்களில் இக் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இதே போன்று, கிராமக் கோயில்களில் கிராம தேவதை வழிபாடு முக்கிய மான ஒன்று.

சிறு கோயில்களில் கற்சிலை விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபடுவது சிரமமானது. ஏனெனில், காட்டுப் பகுதி மற்றும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குலதெய்வ கோயில்களில் சிலை களை பிரதிஷ்டை செய்தால் முறை யாக பூஜைகள், அபிஷேக, ஆரா தனைகள் செய்யப்பட வேண்டும். மேலும், சிலைகளைப் பராமரிப் பதும் சிரமமானது. இதைத் தவிர்க்கும் வகையில், திருவிழா மற்றும் முக்கிய விழா நாட்களில் கற்சிலைகளுக்குப் பதிலாக இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாழை மட்டை, கிழங்கு மாவைக் கொண்டு தத்ரூபமாக சுவாமி சிலைகளை வடித்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

வாழை மட்டை, கிழங்கு மாவால் வடிவமைத்து தத்ரூபமாக காட்சிதரும் அம்மன் சிலைகள்.

விருதுநகர் அருகே வள்ளியூரில் முனியாண்டி கோயிலில் மாசி பவுர் ணமி விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரையும் ஆச்சரியப்படச் செய்தது அங்கு அமைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள். வாழை மட்டை, கிழங்கு மாவு கொண்டு செய்யப்பட்ட சுவாமி சிலைகள், காண்போரின் கண்களை விரிவடையச் செய்தன. அந்த அளவுக்கு அவை மிக தத்ரூபமாக இருந்தன.

இதுகுறித்து, சிலைகளை வடித்த தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி கருப்பசாமி கூறியதாவது: ‘‘வன தேவதை கோயில்கள், குலதெய்வ கோயில்கள், கிராமக் கோயில்களில் சிலை வைத்து பராமரிக்க முடியாத காரணத்தாலும், திருவிழா நாட்களில் சிலை வைத்து வழிபட வேண்டும் என்பதாலும், இதுபோன்று உடனடியாக சிலை செய்து வழிபடுகின்றனர்.

ஸ்தபதி கருப்பசாமி

எந்த கோயிலுக்கு சிலை செய்ய வேண்டுமோ அந்த இடத்துக்கே சென்று சிலைகளைச் செய்து கொடுக்கிறோம். வாழை மட்டை, களிமண், கிழங்கு மாவு, சணல், ரசாயனம் கலக்காத வர்ணம், கலர் காகிதங்களைக் கொண்டு சிலை களைச் செய்கிறோம்’’ என்றார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x