Published : 26 Jan 2014 12:32 PM
Last Updated : 26 Jan 2014 12:32 PM

புதுச்சேரி: கட்டுமானத் தொழிலாளர்களை கொத்தடிமையாக்கிய கவுன்சிலர்

புதுச்சேரியில் கட்டுமானத் தொழிலாளர்களைக் கடத்திச் சென்று கொத்தடிமைகளாக்கியது தொடர்பாக அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் உட்பட 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம், புருஷோத் தமன் இருவரும் அதே பகுதியில் கட்டுமானத் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து அவர்களது குடும்பத் தினர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் திரும்பி வந்தார். அரியலூர் அருகே உள்ள கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமையாக அடைக்கப்பட்டு வேலை பார்த்ததாக குடும்பத்தினரிடம் அவர் தெரிவித்தார். புருஷோத்தமனை வேறொரு இடத்தில் கொத்தடிமையாக வைத்திருந் தனர் என்று கூறினார்.

இந்நிலையில் புதுவை பஸ் நிலையத்தில் புருஷோத்தமன் படம் காணவில்லை என ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்த ஆறுமுகம், அவர் இன்னும் கொத்தடிமையாகவே இருக்கிறார் என்பதையறிந்து புருஷோத்தமனின் குடும்பத்தின ருக்குத் தகவல் தந்தார். இதையடுத்து, புருஷோத் தமன் உறவினர்கள் காரில் அரியலூர் சென்றனர். காவல் துறையினர் உதவியுடன் அவரை மீட்டனர். பின்னர் சனிக்கிழமை காலை அரியலூர் காவல்துறையினர் புருஷோத்தமனை லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத் தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், கண்டமங்கலம் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் முருகன் என்பவர் கட்டு மானத் தொழிலாளர்கள் இருவரையும் கடத்திச் சென்று கொத்தடிமை களாக்கியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதற்கிடையே,இருவரையும் கடத்தியதாகக் கருதப்படும் முருகன், தாமோதரன், அன்பரசு ஆகியோரை புருஷோத் தமனின் உறவினர்கள் பிடித்து வந்து லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத் தனர். அவர்களிடம் லாஸ்பேட்டை ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் மதுக்கடைகளைப் போல் சாராயக்கடைகளும் உள்ளன. சாராயக்கடை களில் பெரும்பாலும் ஏழைகள் தான் குடிக்க வருவார்கள். அவர்களில் சிலருக்கு அதிகளவில் சாராயம் வாங்கித் தந்து கொத்தடிமைகளாக்கின்றனர் என்றும் அதேபோல்தான் தாங்களும் கடத்தப்பட்டோம் என்றும் கொத்தடிமைகளாக இருந்து தப்பி வந்தவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x