Published : 16 Jan 2014 12:00 AM
Last Updated : 16 Jan 2014 12:00 AM
தை முதல்நாள் தமிழ் புத்தாண்டு என்ற அறிவிப்பை ஏற்றுக்கொள்வது கலாச்சார சிதைவு என்று செவ்வாய்க்கிழமை விழுப்புரத்தில் நடந்த மருதம் விழாவில் முன்னால் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரத்தில் மருதம் அமைப்பின் 7-ம் ஆண்டு பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது. இவ்விழாவில் புதுச்சேரி கோபகுமாரின் தமிழிசை, திருப்பத்தூர் கலைசெல்வன் குழுவினரின் துடுப்பாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட தமிழரின் கலாச்சார, பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியதாவது, ‘’இன்று கலாச்சாரம் எது என்பதை அடையாளம் காட்டவேண்டிய அவசியத்தை நாட்டுக்கு உணர்த்திய இயக்கம் திராவிட இயக்கமாகும். தமிழர்களுக்கு புத்தாண்டு என்பது தை பிறந்தால் வழி பிறக்கும் என அன்று முதல் சொல்லிவருகிறார்கள்.
ஆங்கிலப் புத்தாண்டை, தெலுங்குப் புத்தாண்டை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் தை முதல்நாள்தான் தமிழ் புத்தாண்டு என்றால் ஏன்? எதற்கு என கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கு முன்னால் ஆட்சி செய்த அரசு அறிவித்த நல்ல திட்டங்களை, அடுத்து வருகிற அரசு மாற்றினால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை கலாச்சாரச் சிதைவின் அடையாளா மாகும்’’ என்றார்.
இவ்விழாவில் மருதம் அமைப்பைச் சேர்ந்த எழில் இளங்கோ, பாலசுப்பிரமணியன், ரவி கார்த்திகேயன், விழுப்புரம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ், செஞ்சி பேருராட்சித் தலைவர் மஸ் தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT