Published : 02 Apr 2014 10:22 AM
Last Updated : 02 Apr 2014 10:22 AM

தாமரை இலை தண்ணீராய் நிற்கும், கூட்டணி கரை சேராது! - அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேட்டி

அதிமுக-வின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தினமும் 14 இடங்களுக்கு குறையாமல் மைக் பிடித்து முழங்குபவர். கோபியில் பிரச்சாரத்தை முடித்த கையோடு ‘தி இந்து-வுக்கு அவர் அளித்த பேட்டி:

தேர்தல் களம் எப்படி இருக்கிறது. மக்களின் நாடித் துடிப்பு என்ன சொல்கிறது?

“இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தண்ட னையைக் கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர். அதிமுக-வுக்கு மகுடம் சூட்டிப் பார்க்க வேண்டும் என்கிற துடிப்பு மக்களிடம் இருக்கிறது. மு.க.ஸ்டாலின் முன் வைக்கும் முனை மழுங்கிப் போன வாதங்களை எல்லாம் ஒவ்வொரு ஊரிலும் தகர்த்துக்கொண்டிருக்கிறேன்.

ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுக்கும் பிரச்சார பீரங்கியாக அதிமுக உங்களை களமிறக்கி இருப்பதாக சொல்லப்படுகிறதே?

“உண்மைதான். தேர்தல் களத்தில் ஸ்டாலின் தப்பும் தவறு மாக வாசிக்கும் தப்புத் தாளங் களை மக்கள் மன்றத்தில் அம்பலப் படுத்தி வருகிறேன். ஸ்டாலின் ஏதோ தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடப்பதுபோல் பேசி வருகிறார். குற்றாலத்துக்குக் குளிக்கப் போய்விட்டு குழா யடியில் குளித்தவனுக்கும் ஸ்டாலினுக்கும் அதிக வித்தியாசம் இல்லை’’

இந்தத் தேர்தலில் மோடி அலை வீசுவதாக சொல்கிறார்களே?

“மீடியாக்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் திட்டமிட்டு செய்யும் மாயாஜால பிரச்சாரம் தான் மோடி அலை. ஒரு தேசிய கட்சியின் (காங்கிரஸ்) ஆட்சியில் அல்லல்பட்ட மக்கள், இன்னொரு தேசியக் கட்சிக்கு (பாஜக) முடிசூட்ட ஆசைப்பட மாட்டார்கள்.

ஆளுமை ஞானமும் வல்ல மையும் கொண்ட ஜெயலலிதா, நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பங்கு களை மாநில அரசே வாங்கும் என அறிவித்தார். இது இந்திய அரசியலில் யாருக்கும் இல்லாத மதிநுட்பம். தமிழ் கிரீடத்தை தலையில் சுமந்து நிற்கும் கருணாநிதிக்கு தூக்குக் கயிற் றுக்கு அருகில் நின்ற தமிழர்களை விடுவிக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு ஒரு கதவை திறந்தது. தமிழக முதல்வர் இன்னொரு கதவையும் திறந்து தூக்குக் கயிற்றை அறுத்து எறிந்தார்.

பாஜக-வின் ‘பி டீம்’ தான் அதிமுக என்று ப.சிதம்பரம் கூறி இருக் கிறாரே?

2012 டிசம்பர் 12 பொதுக்குழு விலேயே எந்தத் தேசியக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்தவர் ஜெயலலிதா. எங்களை ‘பி டீம்’ என்று சொல் கிற சிதம்பரம் கரைசேர வழி தெரியாமல் தவிக்கிறார். ஜெய லலிதாவின் ஆளுமையை அவரும் அவரது மகனும் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும். இந்தத் தேர்தலோடு சிதம்பரத்தின் அரசியல் களம் முடிவுக்கு வந்துவிடும். எப்போதுமே எங்கள் டீம் தான் ஏ டீம்.

‘அச்சம் என்பது மடமையடா’ பாடலை இனிமேல் ஜெயலலிதா பாடக் கூடாது என்கிறாரே சிதம்பரம்?

’அச்சம் என்பது மடமையடா’ பாடல் தருகின்ற உணர்ச்சியை ஒரு காங்கிரஸ்காரரால் அனுப விக்கவே முடியாது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என்று இன்றைக்கு கருத்துச் சொல்கிற சிதம்பரம், கடந்த காலத்தில் எங்கே இருந்தார்?

இந்தியாவின் மடியில் கொஞ்சிக் கொண்டிருக்கிற ராஜபக்சேவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டுவந்தவர் ஜெயலலிதா. அவருக்கு மட்டும்தான் அந்தப் பாடலை உச்சரிக்கத் தகுதி இருக்கிறது.

திமுக தலைமைக்கு எதிராக அழகிரி போர்க்கொடி தூக்கி இருப்பது பற்றி?

அண்ணனின் இயக்கம் அண்ணன் - தம்பி சண்டையில் அஸ்தமனத்தை நோக்கி விரை கிறது.

ஸ்டாலினை வீழ்த்த ஜெயலலிதா வையும் அழகிரி சந்திப்பார் என்கிறார்களே அவரது ஆதர வாளர்கள்?

சங்கடத்தில் இருப்பவர்களைப் பாதுகாக்கும் நல்ல நெஞ்சம் கொண்டவர் ஜெயலலிதா. ஏற் கெனவே மு.க.முத்து குடும்பத் துக்கு ரூ.5 லட்சம் வழங்கியவர். இருந்தாலும் நாளை என்ன நடக்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை.

தமிழகத்தின் ஐந்து முனை போட்டி என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

காங்கிரஸை யாரும் சீண்டத் தயாரில்லை. இந்த மண் குதிரை நம்பி பயணம் மேற்கொண்டால் காணாமல் போவோம் என்று கருணாநிதி எண்ணி காங்கிரஸை நிராகரித்துவிட்டார்.

பாஜக கூட்டணி தாமரை இலை தண்ணீரைப் போல் கருத் தொற்றுமை இல்லாமல் களத்தில் நிற்பதால் அவர்கள் கரைசேர மாட்டார்கள். இடதுசாரிகளுக்கு சித்தாந்த பலம் இருக்கலாம், மக்கள் பலம் இல்லை. மக்கள் சக்திகொண்ட இயக்கமாக அதிமுக மட்டுமே உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெறுகின்ற 16-வது குரு ஷேத்திரத்தில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் ஜெயலலிதா. இந்த விஸ்வரூபம் சில கட்சிகளை நிராகரிக்கும். சில கட்சிகளை படு குழியில் தள்ளும். இன்னும் சில கட்சிகளை அரசியல் அதிகாரத்தை இழந்து, தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழந்து வீசிய கையும் வெறும் கையுமாக வீதியில் நிற்க வைக்கும்.

தமிழ் கிரீடத்தை தலையில் சுமந்து நிற்கும் கருணாநிதிக்கு தூக்குக்கயிற்றுக்கு அருகில் நின்ற தமிழர்களை விடுவிக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு ஒரு கதவை திறந்தது. தமிழக முதல்வர் இன்னொரு கதவையும் திறந்து தூக்குக் கயிற்றை அறுத்து எறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x