Published : 04 Apr 2014 12:00 AM
Last Updated : 04 Apr 2014 12:00 AM

தமிழகத்தில் சோனியா, ராகுல் பிரச்சாரம் எப்போது?- இன்னும் உறுதியாகவில்லை என ஞானதேசிகன் தகவல்

தமிழகத்தில் ஏப்ரல் 24-ல் வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரத்திற்கு வருவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகனிடம், பிரச்சாரம் தொடர்பாக உறுதியான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து, அவர் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிச் சென்றார் என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நீண்ட வருடங்களுக்கு பின் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில், சோனியா, ராகுல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தமிழ கத்திற்கு பிரச்சாரம் செய்ய எப்போது வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக எந்தவிதமான முடிவும் கட்சி நிர்வாகிகள் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தென் சென்னை மக்களவைத் தொகுதி, ஆலந்தூர் சட்ட மன்றத் தொகுதி ஆகியவற்றிற்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளனர். சமீபத்தில் டெல்லி வந்த ஞான தேசிகன், கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து ‘தி இந்து’ செய்தி யாளரிடம் ஞானதேசிகன் கூறுகை யில், ‘தமிழகத்தில் தனித்து போட்டியிடுவதால் அதிக ஆர்வம் காட்டப்படாமல் இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கும் முயற்சி நடக்கிறது. உண்மை அதுவல்ல. இந்தமுறை தேர்தலில் போட்டியிட தமிழக காங்கிரஸார் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் தமிழகத்தில் கட்டாயம் தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள். அதற் கான இடம், தேதி இன்னும் உறுதியாகாமல் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு அவர்களை அழைப்பதற்காக நான் டெல்லி வந்துள்ளேன் என்ற தகவலில் உண்மையில்லை. ஆலந்தூர், தென் சென்னை தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிப்பது தொடர்பாக அகமது படேலுடன் ஆலோசிப்பதற்காகத்தான் டெல்லிக்கு வந்தேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x