Published : 21 Jan 2014 10:27 AM
Last Updated : 21 Jan 2014 10:27 AM
தமிழக அரசை குறை செல்லும் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு கண்டனம் தெரிவித்து, அதிமுக இலக்கிய அணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக இலக்கிய அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சரும், இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதி தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அமைச்சர் பழனியப்பன், பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், பி.எச்.பாண்டியன், கோகுல இந்திரா மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய சூளுரை ஏற்பதுடன், தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் காங்கிரஸ் அரசுக்கும், திமுகவுக்கும் பாடம் புகட்டும் வகையில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்படும்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி எப்பொழு தெல்லாம் சென்னை விமான நிலையத்துக்கு வருகிறாரோ, அப்பொழுதெல்லாம் ஊடகங் களுக்கு ஏதாவது பேட்டியளிப் பதை வாடிக்கை யாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில், இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையின் தாமதத்துக்கு தமிழக அரசே காரணம் என கூறியுள்ளார். இதனை இலக்கிய அணி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராகும் காலம் கனிந்துவிட்டது. தேசிய கட்சிகள் நாளுக்கு நாள் தேய்ந்து வருகின்றன. திமுகவும் காணாமல் போகக்கூடிய காலம் வந்துவிட்டது. தேசிய தலைமை முதல்வரை தேடி வந்து கொண்டிருக்கிறது. வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து முதல்வரின் சாதனைகளை விளக்கி களப்பணியாற்ற இலக்கிய அணி பாடுபடும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக இலக்கிய அணிக் கூட்டத்தில் பேசுகிறார் அமைச்சர் வளர்மதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT