Published : 01 Aug 2016 08:35 AM
Last Updated : 01 Aug 2016 08:35 AM
வெள்ளெருக்கு வேரில் வடிக்கப்படும் விநாயகர் சிற்பங்கள் நாமக்கல் பகுதியில் இருந்து, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகின்றன. தமிழக அளவில் இத்தொழிலில் ஒருசில குடும்பங்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளன.
விநாயகர் உருவங்களை மரச் சிற்பங்களாக, ஓவியங்களாக, சிலைகளாக படைத்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். இவற்றுக் கான தேவையும் சந்தையில் இருந்து வருகிறது. ஆனால் அவற்றையெல்லாம்விட வித்தி யாசமாக வெள்ளெருக்கு வேரில் விநாயகரின் பல்வேறு உருவங்களை சிறியதும், பெரியது மாக உருவாக்கி விற்பனை செய்கி றார்கள் நாமக்கல்லைச் சேர்ந்த முருகே சன் - மணி தம்பதியர்.
திருநெல்வேலியில் சமீபத்தில் நடைபெற்ற ஆனித் தேரோட்ட விழாவின்போது இந்த மரச்சிற்ப கலைஞர்கள் வீதியோரத்தில் விநாயகர் உருவங்களை விற்பனை செய்துகொண்டு இருந்தனர்.
தமிழகத்தில் திருவண்ணா ம லை, திருத்தணி, மதுரை என்று சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங் களில் நடைபெறும் விழாக் காலங்களில் இவர்கள் முகாமிட்டு, வெள்ளெருக்கு வேர் விநாயகர் சிற்பங்களை அங்கேயே தயார் செய்து விற்பனை செய்கின்றனர். இத்தகைய கலைஞர்கள் தமிழகத் தில் அபூர்வமாகவே உள்ளனர். நாமக்கல் பகுதியில் நான்கைந்து குடும்பத்தினரே இந்த கலையில் ஈடுபட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இவர்களது மகன் கணேசன், மரத் தேர் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். கணேசன் கூறும்போ து, “இதை குலத்தொழிலாகவே செய்து வருகிறோம். பெரிய அள வுக்கு லாபம் கிடைக்காது என்றா லும் ஆத்ம திருப்தி கிடைக்கிறது. வெள்ளெருக்கு வேரில் விநாயகர் உருவங்களை வடிக்கும் கலை அழிந்து வருகிறது. வீடுகளில் இந்த விநாயகர் உருவங்களை வாங்கி வைத்திருந்தால் பில்லி, சூனியம் போன்ற தீமைகளில் இருந்து, பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. சிறிய விநாயகர் சிற்பம் ரூ.40-க்கும், பெரிய அளவிலான விநாயகர் சிற்பம் ரூ.250 வரை விற்பனை செய்கிறோம்’’ என்றார்.
வெள்ளெருக்கு வேர்களை வெட்டி எடுப்பதற்கு விரதம் இருப்பதுடன், வேரை வெட்டும் முன் எருக்கஞ்செடிக்கு பூஜைகளும் செய்யப்படுகின்றன. பக்தியுடன் இந்த விநாயகர் சிற்பங்கள் வடிக்கப்படுகின்றன. இதனால் இவற்றுக்கான மவுசு குறையாமல் உள்ளது. ஆனால் திருவிழாக் காலங்களில் போலீஸாரின் கெடுபிடிகளால் இவற்றை விற்பனை செய்ய முடியாத நிலையும் ஏற்படுவதாக வருந்துகின்றனர்.
வெள்ளெருக்கு வேர் விநாய கர் சிற்பங்களை வடித்து தமிழ கம் முழுவதும் கொண்டுசென்று விற்பனை செய்யும் கலைஞர் களின் கலைத்திறமை அடுத்த தலைமுறைக்கும் சென்று சேர வேண்டும். இந்த கலை அழியா மல் பாதுகாக்கப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT