Last Updated : 14 Aug, 2016 11:26 AM

 

Published : 14 Aug 2016 11:26 AM
Last Updated : 14 Aug 2016 11:26 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு: வெளிமாநில ஏற்றுமதி குறைவு; உற்பத்தியாளர்கள் கவலை

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம் பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு, அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை மழை காரணமாக உப்பளங்கள் பாதிக் கப்பட்டு 50 சதவீத அளவுக்கே உப்பு உற்பத்தியானது. இந்த ஆண்டு பிப்ரவரி முதலே நீடிக்கும் வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதுவரை 55 சதவீதம் உப்பு உற்பத்தியாகி உள்ளது. இன்னும் 8 வாரங்கள் வரை உப்பு உற்பத்தி நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு 80 சதவீதம் வரை உற்பத்தி இருக்கும் என எதிர்பார்ப்பதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரி வித்தனர்.

விலை விழ்ச்சி

தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் கூறியதாவது: நடப்பு ஆண்டு உப்புக்கு எதிர்பார்த்த அளவுக்கு விலை இல்லை. ஒரு டன் ரூ.700 முதல் ரூ.1,000 வரை தான் விலை போகிறது. உற்பத்திச் செலவே டன்னுக்கு ரூ.800 வரை ஆகிறது. எனவே, உற்பத்தியாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை.

ஆந்திராவுக்கு ஆண்டுக்கு 3 லட்சம் டன் வரை அனுப்புவோம். ஆனால், இந்த ஆண்டு 1.5 லட்சம் டன் கூட செல்லவில்லை. கர்நாடாகாவுக்கு 4 லட்சம் டன் வரை செல்ல வேண்டியது, 2 லட்சம் டன் செல்வதே கடினம் என்ற நிலை உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பிஹார், ஒடிஸா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் தூத்துக் குடியில் இருந்து உப்பு சென்றது. ஆனால், அந்த மார்க்கெட்களையும் குஜராத் பிடித்துக்கொண்டது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் உப்பு சந்தையை குஜராத் உப்பு பிடித்துவிட்டது. அங்கு உற்பத்தி செலவு குறைவு என்பதால், குறைந்த விலைக்கு விற்கின்றனர். தற்போது தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு மட்டுமே தூத்துக்குடி உப்பு செல் கிறது.

ஏற்றுமதியும் சரிவு

ஆண்டுக்கு 2 லட்சம் டன் முதல் 3 லட்சம் டன் வரை இருந்த ஏற்றுமதி, தற்போது 1 லட்சம் டன்னை விட குறைந்துவிட்டது. ரசாயன ஆலைகளுக்கு ஆண்டுக்கு 3 லட்சம் டன் முதல் 4 லட்சம் டன் உப்பு செல்லும். இதுவும் பாதியாகக் குறைந்துள்ளது. குஜ ராத் உப்பு விலை குறைவு என்பதால் அதையே வாங்க தொழிற் சாலைகளும் விரும்புகின்றன.

உப்பு உற்பத்தியாளர்களுக்கு அரசு சலுகைகளை வழங்க வேண் டும். சாப்பாட்டுக்கு பயன்படும் உப்பு உற்பத்தியை விவசாய தொழிலாக அரசு அங்கீகரித்தால் விவசாயத்துக்கான சலுகைகள் உப்பு தொழிலுக்கும் கிடைக்கும். இந்தத் தொழிலையும் காப்பாற்ற முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x