Published : 22 Jul 2016 08:04 AM
Last Updated : 22 Jul 2016 08:04 AM

ரசிகர் டிக்கெட்டுக்கும் 3 மடங்கு கட்டணம்: ரஜினி ரசிகர்கள் வேதனை

‘ரஜினி படம் வெளியாகும் நாள்தான் எங்களுக்கு தீபாவளி என்று பண்டிகையே கொண்டா டாத ரசிகர்கள் ரஜினிக்கு உண்டு. அப் படிப்பட்ட ரசிகர்களின் வயிற்றில் அடிக்கும் படமாக கபாலி அமைந் திருக்கிறது’ என்று வேதனை தெரிவிக்கிறார்கள் கோவையில் உள்ள ரஜினி ரசிகர்கள்.

கபாலி திரைப்படம் கோவையில் மொத்தம் 23 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. ரூ.250 முதல் (நின்று கொண்டே படம் பார்க்கும் பார்க்கிங் டிக்கெட்), 3-ம் வகுப்பு, 2-ம் வகுப்பு, 1-ம் வகுப்பு, பால்கனி, பாக்ஸ் என வரும் டிக்கெட்டுகளுக்கு ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்ட ணம் வசூலிக்கப்படுவதாக ஆட்சி யர் அலுவலகத்துக்கும் புகார்கள் வந்துள்ளன.

இந்த நிலையில், ரசிகர்கள் மத்தியிலும் பல்வேறு புகார்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, வழக்கத்துக்கு மாறாக ஒன்றுக்கு மூன்று மடங்கு கட்ட ணம் ரசிகர்களிடமே வசூலிக்கப் படுவதாகவும், இப்படியொரு சூழ்நிலையில் ரஜினி படத்தை எப்போதுமே நாங்கள் பார்த்த தில்லை என்றும் கூறுகிறார்கள் ரசிகர்கள்.

இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:

பொதுவாக ரஜினி படத்தின் முதல் காட்சி ரசிகர்களுக்கானதாக ஒதுக்கப்படும். அதற்கு அந்தக் காட்சி முழுவதற்கும் சேர்த்து என்ன கட்டணம் வருகிறதோ, அந்தத் தொகையைக் கொடுத்து காட்சியை ‘புக்’ செய்வோம். இது ஆரம்ப காலத்தில் உள்ள நடைமுறை. பின்னாளில் அதுவே காட்சிக்கு என்ன கட்டணமோ அதைவிட கூடுதலாய் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கொடுத்து புக் செய்வோம். அந்தத் தொகைக்கு ரசீதுகள் அச்சடித்து ரசிகர்களுக்குள் பகிர்ந்து கொள்வோம். ‘லிங்கா’ படம் வெளியானபோதுகூட அப்படித்தான் நடந்தது.

உதாரணத்துக்கு, கோவையில் உள்ள முக்கிய திரையரங்கில் ரூ.1.35 லட்சம் கொடுத்து காட்சியை முன்பதிவு செய்தோம். ஆனால் இப்போது, அதே திரையரங்கில் அனைத்து டிக்கெட்டுகளுக்கும் தலா ரூ.500 என திரையரங்கு அதிபர்களே ரசிகர் கட்டணத்தை நிர்ணயித்துவிட்டனர். கடந்த முறை ரூ.1.35 லட்சம் செலுத்தி வாங்கிய அதே திரையரங்கில் முதல் காட்சிக்கு தற்போது ரூ.3.75 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது. நாங்கள் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு 100 டிக்கெட் வேண்டும் என்றால் 50 ஆயிரம் கொடுத்தால் போதும். உரிய ரசிகர் டிக்கெட்டுகள் கொடுத்து விடுகிறார்கள். அதை வெளியே தாறுமாறாக விற்கிறார் கள். உண்மையான ரசிகர்கள் சென்று எந்த அடையாளங்க ளைக் காட்டினாலும், ரசிகர்கள் டிக்கெட் தீர்ந்துவிட்டது என்றே பதில் வருகிறது.

அப்படியே ரசிகர் மன்ற டிக்கெட் இருந்து, இஷ்டம் போல் ‘ரேட்’ சொன்னால், ‘என்ன இந்த ‘ரேட்’ வைக்கிறீங்களே?’ என்று கேட்டு, ‘மாநிலத் தலைமைக்கு தொலை பேசியில் தகவல் சொல்வோம்’ என்றால் அதையும் கண்டுகொள் வதே இல்லை. நாங்கள் திரை யரங்குக்காரர்கள் கேட்ட கட்ட ணத்தை கொடுத்தே டிக்கெட் வாங்கியுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x