Published : 17 Mar 2014 12:00 AM
Last Updated : 17 Mar 2014 12:00 AM
திருவண்ணாமலை அருகே ஆதி அண்ணாமலையார் கோயில் அருகே கவுத்தி மற்றும் வேடியப் பன் மலைகளைப் பாதுகாக்க காவல்துறை தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலையிலிருந்து இரும்புத் தாது எடுக்க முயற்சிக்கும் ஜிண்டால் நிறுவனத்தையும், துணை போகும் மத்திய அரசை யும் கண்டித்து ஆதி அண்ணா மலையார் கோயில் அருகே கிரிவலப் பாதுகாப்பு குழு மற்றும் இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆதி அண்ணாமலையார் கோயிலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப் பாளர் சங்கர் தலைமை வகித்தார். பரசுராமன் வரவேற்றார். பால கிருஷ்ணன், நடராஜ், முருகன், குமார் ஆகியோர் பேசினர். மலை களில் இருந்து இரும்புத் தாது எடுப்பதன் மூலமாக வாழ் வாதாரத்தை அழிக்க நினைக்கும் மத்திய அரசு மற்றும் ஜிண்டால் நிறுவனத்தைக் கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டன. ஜிண்டால் நிறுவனத்தையும், அவர்களுக்கு ஆதரவாக வருபவர்களையும் விரட்டியடிக்க வேண்டும் என்று பெண்கள் ஆவேசமாக கோஷ மிட்டனர். அப்போது, வேடியப்பன் சாமி அருள் வந்துவிட்டதாக கூறி 5 பெண்கள் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞர் சங்கர் பேசுகையில், ‘‘ சேலம் அருகே மக்களைத் திரட்டி அரசியல் கட்சியினர் எதிர்ப்பு காட்டியதால், இரும்புத்தாது எடுக்க தி.மலைக்கு வந்துள்ளனர். இங்கு அரசியல், சாதி ரீதியாக நாம் பிளவுபட்டுள்ளோம்.
இரும்பையும் மண்ணையும் பிரிக்க தண்ணீர் வேண்டும். மலை யில் போர் போட்டு எடுத்ததுபோக, மேலும் தேவைக்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதனால், விவசாயத் தேவைக்கு மட்டுமின்றி குடிநீருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை யாரை தவிர நமக்கு வேறு கதியில்லை. அதனால், அருள் மிகு அண்ணாமலையார் கோயிலில் நாளை (இன்று) அங்க பிரதட்சணம் செய்ய இருக்கிறோம்’’ என்றார்.இதற்கிடையே, கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலை களிலிருந்து இரும்பு தாது எடுப்ப தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறிப்பிட்டு மரங்களையும் மலை களையும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கிரிவலம் சென்ற பக்தர்களிடம் அமைதி அறக் கட்டளையினர் துண்டு பிரசுரங் களை விநியோகம் செய்து ஆதரவு திரட்டினர்.
வீடுகளில் கருப்பு கொடி
கவுத்தி மற்றும் வேடியப்பன் மலைகளில் இருந்து இரும்புத் தாது எடுக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை தடையை மீறி தி.மலை ஆதி அண்ணாமலையார் கோயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கவுத்தி மலை மற்றும் வேடியப் பன் மலையிலிருந்து இரும்புத் தாது எடுப்பதற்கு 51 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின் றனர். வேடியப்பன் மலை அருகே உள்ள இனாம்காரி யந்தல் கிராமத்திலுள்ள வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.
இரும்புத்தாது எடுக்கும் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்று எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT