Published : 24 Jul 2016 08:58 AM
Last Updated : 24 Jul 2016 08:58 AM
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கட்சி மேலிடம், அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கு 75 சதவீதம் பணம் வழங்க இருப்பதாகக் கூறப்படுவது அதிமுக வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ளது. ஆளும்கட்சியான அதிமுக, எம்பி தேர்தலைப்போல் பெரிய வெற்றி பெற தேர்தல் வியூகம் வகுத்துள்ளது. அதற்காக அக்கட்சி மாவட்டங்கள்தோறும் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கின்றது.
இக்கூட்டங்களில் அப்பகுதி அமைச்சர், எம்பி-க்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளை, கட்சி உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை வழங்குகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தல் நேரத் தில் கூடுதல் வாக்குகள் பெற்று கொடுப்பவர்களுக்கு, உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படும் என மாவட்டச் செய லாளர்கள் தரப்பில் இருந்து நிர்வா கிகளுக்கு உறுதியளிக்கப்பட்டது. அதன்படி கூடுதல் வாக்குகள் பெற்று கொடுத்தவர்கள் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பை எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால், தற்போது அதிமுக வில் போட்டியிடும் வேட்பாளர் கள், அப்பகுதியில் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களாக வும், தேர்தல் செலவை பார்த்துக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள தாகக் கூறப் படுகிறது.
அதனால், வசதி படைத்தவர்க ளுக்கும், மாவட்டச் செயலாளர்க ளுக்கு நெருக்கமானவர்களுக்கும், தற்போது பதவியில் இருப்பவர் க ளுக்குமே வாய்ப்பு கிடைக் கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், கட்சித் தலைமை எந்த நேரத்திலும் எந்த முடிவும் எடுக்க லாம் என்பதால் சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் வாக்கு பெற்றுக் கொடுத்தவர்களும், கட்சிக்காக நீண்ட நாள் உழைத்த அடிமட்ட நிர்வாகிகளும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
திமுக, இதுவரை உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணி களில் ஈடுபடாமல் இருந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் தோல் விக்கான காரணங்களை ஆராய்ந்து, தொகுதி வாரியாக உள்ளடி வேலையில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் திமுக தலைமை ஆளும்கட்சிக்கு சட்டப்பேரவைத் தேர்தலைப்போல் கடும் போட்டியை கொடுத்து கூடுதல் இடங்களைக் கைப்பற்ற வியூகம் வகுத்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்டங்கள், குறைந்த வாக்கு சதவீதத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பகுதிகளில் உள்ளாட்சிப் பதவிகளை கைப்பற்ற அதிரடி முடிவு எடுத்துள்ளது.
கட்சித் தலைமை நிதியுதவி
இதுகுறித்து அக்கட்சி நிர்வா கிகள் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தலில் போட் டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கான 75 சதவீத பணத்தை திமுக மேலிடமே வழங்க முடிவு செய்துள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களிடம் செல்வாக்கு பெற்ற ஒட்டுக்கு பணமே கொடுக்காத வேட்பா ளர்கள் வெற்றி பெற்ற வரலாறு நிகழ்ந்துள்ளது. அதனால், மக்கள் செல்வாக்கு பெற்ற, கட்சிக்கு விசு வாசமுள்ள, தகுதியான நபர்களை தேர்வு செய்ய அக்கட்சி முடிவு செய்துள்ளது.
‘தேர்தல் செலவுக்கு பயந்து ஆளும்கட்சியை எதிர்த்து போட்டி யிட, நிர்வாகிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் தயக்கம் ஏற்படலாம். கட்சியே நிதி கொடுத்தால் நிர் வாகிகள் தைரியமாக போட்டி யிட முன்வருவார்கள்’ என கட்சி மேலிடம் கருதுகிறது. தேர்தல் செலவை கண்காணிக்கவும், தேர்தல் பணி களை ஒருங்கிணைக் கவும், திமுக மேலிடத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப் படுகிறது. இதனால், திமுக நிர்வாகிகள் உற்சாகம் அஅஅடைந்துள் ளனர். உள்ளாட்சியில் தற்போது பெரும்பான்மை பத விகளில் ஆளும் கட்சியே இருப் பதால் அக்கட்சி கவுன்சிலர்கள் மீது மக்களிடம் வெறுப்பு உள்ளதாகக் கூறப்படு கிறது. இதற்கிடையே திமுகவும் பலமான போட்டி கொடுக்கும் என்பதால் அதிமுக வட்டாரம் அதிர்ச்சியடைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT