Published : 01 Sep 2016 10:34 AM
Last Updated : 01 Sep 2016 10:34 AM
நவீன நீர்வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்தினால் யாரிடமும் தண்ணீருக்காக நாம் கையேந்தி நிற்க வேண்டாம். தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைகளுக்கு இது தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்று நவீன நீர்வழிச்சாலை பேரியக்கத்தின் தலைவர் பொறி யாளார் ஏ.சி.காமராஜ் தெரிவித்துள்ளார்.
நதிகளை இணைக்கும் விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை இல்லை. ஆனால், பொறியாளர் ஏ.சி.காம ராஜ் தலைமையிலான வல்லுநர் குழு உருவாக்கி இருக்கும் நவீன நீர்வழிச் சாலை திட்டத்தைத் தென் மாநிலங்கள் வரவேற்றுள்ளன. நதிகள் இணைப்பு என்பது ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு நீரை அனுப்பலாம்; திரும்பப் பெறமுடியாது. ஆனால், நவீன நீர்வழிச் சாலை திட்டத்தில், தேவைப்படும்போது நீரை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதி இருக் கிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஏ.சி.காமராஜ் கூறியதாவது:
நவீன நீர்வழிச் சாலை திட்டம் என்பது ‘பவர் கிரிட்’ போன்றது. தேவையில்லாதபோது நீரைத் தந்துவிட்டு, தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம். இதனால் யாருடைய பங்கீட்டு உரிமையும் பறிபோகாது. மாறாக, வீணாக கடலில் கலக்கும் தண்ணீரைக் கொண்டு வளம் கொழிக்க வைக்க லாம். மற்ற மாநிலங்கள் எத்தனை அணைகள் கட்டினாலும் அதைப் பற்றி கவலைப்படவும் வேண்டாம்.
கோதாவரியில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக கடலுக்குப் போகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4 ஆயிரம் டிஎம்சி வீணானதாக ஆந்திர மாநில தலைமைப் பொறியாளர் என்னிடம் கூறினார். கர்நாடகாவிடம் வெறும் 419 டிஎம்சி தண்ணீருக்கு நாம் முட்டி மோதுகிறோம். ஆனால், அவர்கள் ஆண்டுதோறும் சராசரியாக 2 ஆயிரம் டிஎம்சி தண்ணீரை கடலில் விடுகிறார்கள்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த போராட வேண்டி இருக்கிறது. ஆனால், கேரளத்தில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 2.400 டிஎம்சி தண்ணீர் கடலுக்குப் போகிறது.
இந்த மூன்று மாநிலங்களும் தெலங்கானாவும் நவீன நீர்வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்து வது குறித்து எங்களோடு ஆர்வத் துடன் பேசிவருகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மற்ற மாநிலங்கள் ஒத்துவராமல் போனாலும் தனது மாநிலத்துக் குள்ளேயே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் தயாராக இருக் கிறார். தமிழக முதல்வர் ஜெய லலிதா, 2011 தேர்தல் வாக்குறுதி யிலேயே இத்திட்டத்தைச் சேர்த்திருந்தார். கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் இதுகுறித்து பல இடங்களில் பேசினார். ஆனாலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு தரப்பில் இன்னமும் ஏனோ சுணக்கம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும். ஆனால், மாநில அரசு ரூ.500 கோடி செலவழித்தால் போதும். மீதமுள்ள தொகையை மத்திய அரசும் தனியார் நிறுவனங் களும் செலவழிக்க தயாராக இருக்கின்றன. இத்திட்டம் செயல் பாட்டுக்கு வந்தால் நீர்வளம் செழிப்ப தோடு நீர்வழிப் போக்குவரத்து, நீர் மின்சாரம் உள்ளிட்ட வேறு பல வழிகளிலும் அரசுக்கு ஆண்டுக்கு சராசரியாக சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.
எனவே, இனியும் காலம் தாழ்த் தாமல் இத்திட்டத்தை செயல்படுத் தும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண் டும் என முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். எதிர்காலத் தில் தமிழகத்தின் தண்ணீர் பிரச் சினைகளுக்கு இத்திட்டம் ஒன்று தான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT