Published : 30 Jan 2014 12:00 AM
Last Updated : 30 Jan 2014 12:00 AM
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு கூடுதலாக 10 நிர்வாகிகள் மற்றும் 18 செயற்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு அதன் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித் துள்ளார். இதனை கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் துவிவேதி புதன்கிழமை வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் கூடுதல் துணைச் செயலாளர்களாக கலைச்செல்வன், செந்தில்குமார், ஆர்.ராதாகிருஷ்ணன், சுப சோமு மற்றும் அன்னபூர்ணா தங்கராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே துணைச் செயலாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பராஜ், புதுக்கோட்டை மாவட்ட தலைவராக மட்டும் பதவி வகிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய பொதுச்செயலாளர்களாக அருள் பெத்தய்யா, முன்னாள் எம்.எல்.ஏக்கள் விஜயகுமார் மற்றும் எஸ்.ராஜ்குமார், முன்னாள் எம்.பி. தீர்த்தராமன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செயற்குழு உறுப்பினர்களாக நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், நாகர் பெரியசாமி, ஆர்.எஸ்.செந்தில்குமார், ஏகம்பவாணன், செங்கம் குமார், செந்தில், கே.ஓ.ஆர்.செந்தாமரை, பி.காந்தி, நாமக்கல் இளங்கோவன், காலனி வெங்கடாசலம், ஜே.பி.சுப்ரமணியம், ஏ.கோபண்ணா, மகேந்திரன், அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர்.ஈ.எஸ்.எஸ்.ராமன் மற்றும் சுவாமிநாதன், முன்னாள் எம்.பி. நரசிம்மன் ஆகிய 18 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செயற்குழுவில் காங்கிரஸின் அனைத்து எம்.எல்.ஏக்களும் நிரந்தர அழைப்பாளர்களாக இருப்பார்கள் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT