Published : 23 Mar 2017 09:03 AM
Last Updated : 23 Mar 2017 09:03 AM

உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து புதிய மாநகராட்சி, நகராட்சிகள் உருவாக்க திட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, புதிய மாநகராட்சிகள், நகராட்சிகளை உருவாக்கும் பணிகளில் நகராட்சி நிர்வாகத்துறை ஈடுபட்டு வருகிறது.

நகரமயமாக்கலில் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற் படுத்துவது தவிர்க்க முடியாத அம்சமாகும். நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் உள்ளாட்சி களை குறிப்பிட்ட காலத்துக்கு பின் தரம் உயர்த்தி, அடுத்த நிலைக்கு மாநில அரசு எடுத்து செல் கிறது. ஊராட்சிகளாக உள்ளவை பேரூராட்சிகளாகவும், பேரூராட்சி களாக உள்ளவை நகராட்சிகளாக வும், நகராட்சிகளாக உள்ளவை மாநகராட்சிகளாகவும் நிலை உயர்த்தப்படுகின்றன. அவ்வாறு அமையும் புதிய உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள்தொகை, நகர வளர்ச்சி, அதன் உட்கட்ட மைப்பு வசதிகளுக்கேற்ப, மாநிலங் களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக் கீடு செய்து வருகிறது.

அந்த அடிப்படையில் சென்னை மாநகராட்சியுடன் அதன் புறநகர் பகுதிகளான, அம்பத்தூர், ஆலந் தூர், திருவொற்றியூர், மாத வரம், எண்ணூர் உள்ளிட்ட பகுதி களை இணைத்து சென்னை மாநக ராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதேபோல தமிழ கத்தில் பல புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்பட்டன. மாநகராட்சிகளாக தரம் உயரும் பட்சத்தில், அங்கு வசிக்கும் மக்க ளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், பாதாள சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால், நடைபாதைகள், உயர்தர சாலை கள், சுரங்கப் பாதைகள், மேம் பாலங்கள் உள்ளிட்ட மேம்படுத்தப் பட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர முடியும்.

சென்னையில் தென் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகளை, மாநகராட்சிகளாக மாற்றவும், பேரூராட்சி, ஊராட்சி களை இணைத்து நகராட்சிகளாக தரம் உயர்த்தவும், நகராட்சி நிர்வாகத்துறை முடிவு செய்து வருகிறது. உள்ளாட்சி அமைப்பு களை தற்போது நிர்வகித்து வரும், தனி அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

மாநகராட்சிகள்

தாம்பரம், செம்பாக்கம் நகராட்சி கள், மாடம்பாக்கம், பீர்க்கன் காரணை, பெருங்களத்தூர், சிட்ல பாக்கம் பேரூராட்சிகள். மேலும், முடிச்சூர், திருவஞ்சேரி, அகரம் தென், மதுரைப்பாக்கம், வேங்கை வாசல், ஒட்டியம்பாக்கம், மப்பேடு, வரதராஜபுரம், மேடவாக்கம், பெரும்பாக்கம் போன்ற ஊராட்சி களும் இணைந்து, புதிய மாநக ராட்சியாக தாம்பரம் மாறவுள்ளது.

அதேபோல பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிக ளும், திருநீர்மலை பேரூராட்சியும் பொழிச்சலூர், கவுல்பஜார், திரி சூலம், மூவரசம்பேட்டை, கோவி லம்பாக்கம், நன்மங்கலம் போன்ற ஊராட்சிகளும் இணைக்கப்பட்டு புதிய மாநகராட்சியாக பல்லாவரம் மாற்றப்படவுள்ளது.

புதிய நகராட்சிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இடைக்கழிநாடு, திருக்கழுகுன்றம், உத்திரமேரூர், பெரும்புதூர், திருப்போரூர், மாங்காடு, குன்றத் தூர் போன்ற பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த் தப்படவுள்ளன.

ஊரப்பாக்கம், வண்டலூர், மாடம்பாக்கம் ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, ஊரப்பாக்கம் நகராட்சியாக தரம் உயர்கி றது. மவுலிவாக்கம், அய்யப்பன் தாங்கல், கெருகம்பாக்கம், ஆகிய மூன்று பகுதிகள் இணைந்து, நகராட்சியாக தரம் உயர்கிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயரவுள்ளன.

இதனால், வரும் உள் ளாட்சி தேர்தலுக்குள் பல உள் ளாட்சி அமைப்புகள் மாநக ராட்சிகளாகவும், நகராட்சிகளாக வும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.

இதுகுறித்து உள்ளாட்சி தனி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அடிப்படை வசதிகளை சீராக செய்யவும், மத்திய அரசிட மிருந்து கூடுதல் நிதி பெறவும் பல உள்ளாட்சிகள் தரம் உயர்த் தப்படவுள்ளன.

இதற்கான புதிய திட்டத்துக்கு அனைத்து தனி அதிகாரிகள் ஒப்புதல் வழங்கி யுள்ளனர். இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானிய கோரிக் கையின்போது இந்த புதிய அறி விப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x